செல்வம், புத்திசாலித்தனம், வணிகம், போன்றவற்றுக்கு காரணமான கிரகமாகக் கருதப்படும் புதன், மகாதசை 17 ஆண்டுகள் நடைபெறும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படுகிறது. புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற 25 நாட்கள் ஆகும்.
ஜாதகத்தில் புதன் அசுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களின் புத்தி சரியாக செயல்படாது என்று சொல்லப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு புதனின் மகாதசை நடந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் பலத்த பின்னடைவு ஏற்படும்.
புதனின் மகாதசை
ஜோதிட சாஸ்திரத்தில், புதனின் மகாதசை மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் நீடிக்கும் புதனின் மகாதசை காலமானது, ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது. ஒருவரின் அறிவு, பேச்சுவார்த்தை, தொழில், நிதி நிலை போன்றவற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் மகாதசை காலம் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவருடைய 17 வருடங்கள் மகிழ்ச்சியாகக் கழியும். ஆனால், அதுவே புதனின் மகாதசைகாலம் சரியாக இல்லை என்றால, வாழ்க்கை சுவாரசியமற்று போய்விடும்.
மனதில் நிம்மதி, சிந்தனையில் தெளிவு, புத்திசாலித்தனமான முடிவு இருக்க வேண்டிய நிலையில், புதனின் மகாதசை மோசமாக இருந்தால், சரியான முடிவை எடுக்க முடியாமல், குழப்பான சிந்தனைகள் சூழ நிம்மதி இழக்கும் சூழல் உருவாகிறது. பண விவகாரங்களிலும் பிரச்சனை ஏற்படும்.
மேலும் படிக்க | குரு உதயம்: ஜூன் 6 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், வீட்டில் சுபீட்சம் கூடும்
வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமானால், புதனின் மகாதசையின் போது சில பரிகார நிவர்த்திகளை செய்ய வேண்டும்.
ஜாதகத்தில் வலுவிழந்த புதனை வலுப்படுத்த, புதன்கிழமைகளில் பசுவிற்கு தீவனம் கொடுங்கள். புதன் தொடர்பான விஷயங்களை தானம் செய்வதும் நல்லது.
புதன்கிழமைகளில் ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும்.. புதன்கிழமை காலை 7 மணி முதல் 9.30 மணி வரை பெருமாள் ஆலயத்துக்கு சென்று வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் புதனின் நிலை வலுவடையும், துன்பங்கள் குறையும். அதேபோல பெருமாளுக்கு உகந்த துளசியை வழிபடுவதும், பயன்படுத்துவதும், பலன் தரும். வீட்டில் துளசிச்செடி வளர்த்து அதை வணங்கி வருவது நல்லது. துளசிச் செடி வீட்டில் இருந்தால், மனதில் அமைதி நிலவும். லட்சுமியின் அம்சமான துளசியை வணங்கினால், புதனின் கிரக தோஷங்கள் அகன்றுவிடும்.
புதன் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடவும். சிவாலயங்களுக்கு சென்று வழிபடவும். குன்றின் மேல் அமர்ந்திருக்கும் குமரனை, மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளன்று தரிசனம் செய்துவந்தால், புதன் தசாபுத்தி காலத்தை நிம்மதியாக கடந்துவிடலாம்.
புதனுக்கு உரிய பச்சை நிற ஆடைகளை புதன்கிழமை நாட்களில் அணியுங்கள். பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... தப்பிக்க சில பரிகாரங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ