உக்கிரத்தில் சனி... 2024-ல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

Shani Margi 2024: நீதியின் கடவுளான சனி, 2024 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். சனியின் இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு பெரிய அடியை கொடுக்கலாம். இது தவிர, ஏழரை சனியாலும் பாதிக்கப்படுவார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 20, 2023, 11:21 AM IST
  • கும்ப ராசிக்காரர்களை சில சர்ச்சைகளில் சிக்க வைக்கும்.
  • மீன ராசிக்காரர்களும் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்படுவார்கள்.
  • சொத்து, வாகனம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
உக்கிரத்தில் சனி... 2024-ல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் title=

ராசிகளில் சனி வக்ர நிவர்த்தி 2024 பலன்: புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள மக்கள் மனதில் ஆவல் அதிகமாக இருக்கிறது. சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார். மேலும், சனி மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் கருதப்படுகிறது மற்றும் அதன் நிலையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு நீண்ட காலம் வரை மக்கள் மீது இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், 2024 ஆம் ஆண்டில் சனியின் நிலை ஏற்படப் போகும் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின்படி, 2024 ஆம் ஆண்டில், சனி அதன் சொந்த ராசியான கும்பத்தில் நேர் கொண்ட பார்வை இருக்கும். இதனால் 5 ராசிகள் ஏழரை சனி நிழலின் கீழ் இருக்கும்.

இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்:
தீய செயல்களை செய்பவர்களுக்கு உடல், மன மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சனி பகவான் தருகிறார். அவர்களின் வாழ்க்கையில் அமைதியின்மை, மன அழுத்தம், நோய்கள் மற்றும் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சனியின் அசுப பார்வையை தவிர்க்க நாம் சனிக்கு பிடிக்காத செயல்களைச் செய்யக்கூடாது. உதாரணமாக, பெண்கள், முதியவர்களை அவமதிக்க கூடாது. கெட்ட சகவாசம் மற்றும் போதைப்பொருட்களிலிருந்து விலகி இருங்கள். மற்றவர்கள் பணத்தின் மீதும் ஆசை படக்கூடாது. ஏமாற்றுதல், பொய் மற்றும் வஞ்சகத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் சனி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவார்.

மேலும் படிக்க | 2024 புத்தாண்டு ராசி பலன்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை கொட்டும்

2024ல் சனியின் தீய பார்வை இந்த ராசிக்காரர்களுக்கு மீது இருக்கும்:

கடகம்: 2024 ஆம் ஆண்டில் கடக ராசியில் சனியின் தாக்கம் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், ஒரு சிறிய தவறு கூட பெரிய இழப்பை ஏற்படுத்தும். ஆபத்தான வேலையைச் செய்யாதீர்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசியும் 2024 ஆம் ஆண்டு சனியின் நிழலின் கீழ் இருக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். சொத்து, வாகனம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

மகரம்: மகரம் ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டு ஏழரை சனியால பாதிக்கப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற, முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு சேவை செய்ய வேண்டும். 

கும்பம்: கும்பத்தில் சனி இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனி தாக்கத்தில் உள்ளனர். 2024 ஆம் ஆண்டில், இந்த ராசிக்காரர்களை சில சர்ச்சைகளில் சிக்க வைக்கும். பரிக்காரத்திற்கு, சனி ஸ்தோத்திரம், சனி சாலிசாவை பாராயணம் செய்யவும்.

மீனம்: 2024 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களும் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வருடம் முழுவதும் கவனமாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த 5 ராசிகளுக்கு பணமழை கொட்டும்!

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News