குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்

Guru Peyarchi Palangal 2024: குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மே 01 அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைவார். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 24, 2024, 05:49 PM IST
  • அதிர்ஷ்டம் நன்றாக பக்க பலமாக இருக்கும்.
  • புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் title=

Guru Peyarchi Palangal 2024: வேத ஜோதிடத்தில், குரு பகவான் வாழ்க்கையின் காரணியாகவும், ஒரு நல்ல கிரகமாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் குருவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. கிரங்களில் சனிக்குப் பிறகு, வியாழன் மெதுவாக நகரும் கிரகமாகும். ஏனெனில் குருவுக்கு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் 13 மாதங்கள் எடுக்கும். அதுமட்டுமின்றி இந்த குருவின் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். குரு பெயர்ச்சி அடையும் போதெல்லாம், அது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. அந்த வகையில் குரு சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் மே 1 ஆம் தேதி 2024 பெயர்ச்சி அடையப் போகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மே 01 அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைவார். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign): குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் நடக்கப் போவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேறும். பொருள் வசதிகள் அதிகரிக்கத் தொடங்கும். பதவி உயர்வைப் பெறுவீர்கள். மகிழ்ச்சிகரமான செய்திகளைப் பெறுவீர்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம். திருமண வாழ்வில் அபரிமிதமான மகிழ்ச்சியை பெறுவீர்கள். உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக பக்க பலமாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பன்னிரண்டாம் வீட்டில் அதாவது 12ஆம் வீட்டில் நடக்கப் போவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். உங்கள் சுப செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும்.

கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் நடக்கப் போகும் குரு பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். லாபம் பெருகும். கடக ராசிக்காரர்களின், ஆசைகள் அனைத்தூம் நிறைவேறும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். இந்த குரு பெயர்ச்சியின் போது, ​​உங்கள் வீட்டிற்கு ஒரு சிறிய விருந்தினர் வரலாம். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.

மகரம் (Capricorn Zodiac Sign): குரு பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு கல்வி, அறிவு, குழந்தைகளின் அன்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். சிறிய விருந்தினர் வரலாம். இது தவிர, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறலாம். வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் வெற்றியும் முன்னேற்றமும் அடையலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Guru Peyarchi Palangal 2024: குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அரச வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News