கும்பத்திலிருந்து மகரம் செல்லும் சனி: இந்த 5 ராசிகளின் தலைவிதி மாறும்

Shani Vakri: சனி ஜூலை 12-ம் தேதி கும்ப ராசியை விட்டு மகர ராசிக்கு வருகிறார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு தீய பலன்களும் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 24, 2022, 12:05 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் பண விஷயத்தில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.
  • மகர ராசிக்கு சனி செல்வது சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
கும்பத்திலிருந்து மகரம் செல்லும் சனி: இந்த 5 ராசிகளின் தலைவிதி மாறும்  title=

கர்மாவிற்கு ஏற்றவாறு பலன்களை அளிக்கும் சனி பகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே கும்ப ராசியில் பிற்போக்கு நகர்வில் உள்ள சனி பகவான், இப்போது கும்ப ராசியை விட்டு மகர ராசிக்கு செல்கிறார். 

மகர ராசியிலும் இவர் வக்கிர நிலையிலேயே இருப்பார். சனி இரண்டு கட்டங்களில் கும்ப ராசிக்குள் நுழைவார். முன்னதாக ஏப்ரல் 29-ம் தேதி சனி கும்ப ராசியில் பெயர்ச்சியானார். தற்போது மீண்டும் ஜூலை 12-ம் தேதி கும்ப ராசியை விட்டு மகர ராசிக்கு வருகிறார். சில மாதங்கள் இங்கேயே இருந்துவிட்டு, கும்ப ராசிக்கு சனி பகவான் மீண்டும் திரும்புவார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு கெட்ட பலன்களும் கிடைக்கும். 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் பண விஷயத்தில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். எனினும், சனி பகவான் மகர ராசிக்கு செல்வது உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பல விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க | சனியின் தாக்கத்தால் இந்த ராசிகளுக்கு 3 ஆண்டுகள் அவஸ்தை காலம், எச்சரிக்கை தேவை 

சிம்மம்:

மகர ராசிக்கு சனி செல்வது சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில், உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி:

மகர ராசியில் சனி செல்வதால் கன்னி ராசிக்கார்ரகள் மகத்தான வெற்றியை அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல பதவியும், சமூகத்தில் மரியாதையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் உண்டாகும். குழந்தைகளின் கல்வி, செழிப்பு, வேலை போன்றவற்றில் நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். செய்யும் காரியத்தில் சில தடைகள் வந்தாலும் அவை இறுதியில் நல்ல முறையில் முடிவடையும். வாழ்க்கையில் விடை தெரியாமல் இருந்த பல விஷயங்களுக்கு நல்ல பதில்கள் கிடைக்கும். எனினும், இதில் சில தாமதங்கள் ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த தானங்கள் செய்தால் உங்கள் தலைமுறைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News