ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை என்ற பெயரைக் கேட்டால் மக்கள் மனதில் பயம் ஏற்படுகிறது. சனியின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி கல்லை செதுக்கி செதுக்கி சிற்பமாக ஆக்குகிறார்களோ, அதே போன்று நம்மை கஷ்டங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் சனி மாற்றுகிறார் என்றால் மிகையாகாது.
கும்ப ராசிக்கு அதிபதியான சனி
இந்த நேரத்தில் சனி கும்பத்தில் இருக்கிறார். கும்ப ராசிக்கு அதிபதியான சனி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தனது ராசியில் இருப்பார். இதன் காரணமாக 3 ராசிகளில் ஏழரை நாட்டு சனியும், 2 ராசிகளில் சனி திசையும் இருக்கும். ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் மிகுந்த சிரமத்தைத் தருகிறது.ஏழரை நாட்டு சனியின் 3 கட்டங்களில் ஒவ்வொன்றும் இரண்டரை வருடங்கள் கொண்ட 3 நிலைகளைக் கொண்டது. முதல் கட்டத்தில், சம்பந்தப்பட்ட பொருளாதார நிலையை பாதிக்கிறது, இரண்டாவது கட்டத்தில், பொருளாதாரம், உடல் - மன ஆரோக்கியம் மற்றும் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது. அதே நேரத்தில், மூன்றாவது கட்டத்தில், ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இவற்றில், ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் மிகவும் ஆபத்தானது, இதில் சனி அதிகபட்ச தொல்லைகளை அளிக்கிறது.
கும்பத்திற்கு இரண்டாம் கட்ட ஏழரை நாட்டு சனி
கும்பத்தில் சனியின் சதே சதியின் இரண்டாம் கட்டம் ஜனவரி 17, 2023 முதல் தொடங்கி மார்ச் 2025 வரை தொடரும். மறுபுறம், கும்ப ராசிக்காரர்கள் ஜூன் 3, 2027 அன்று ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை பெறுவார்கள். இந்த நேரத்தில், இந்த ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சனியின் கோபத்தால் இவர்கள் செல்வம், குடும்பம், உடல்நலம், வேலை மற்றும் தொழில் சம்பந்தமான சிரமங்களை சந்திக்க நேரிடும். யார் இவர்களை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். எனவே ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுங்கள்.
மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!
ஏழரை நாட்டு சனி - சில எளிய பரிகாரங்கள்
இருப்பினும், தங்கள் ஜாதகத்தில் சனி பகவான் மற்றும் பிற கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கும், தவறான அல்லது ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யாமல், நல்லவற்றையே செய்பவர்களுக்கும், இந்த நேரம் மிகவும் மங்களகரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, முடிந்த வரையில் நிகழ்கால வாழ்க்கையில் உங்களது புண்ணிய செயல்களை அதிகப்படுத்துங்கள். சனி பெயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டும் ராசியை சேர்ந்த நபர்கள் முதலில் செய்ய வேண்டியது. தாங்கள் செய்த தவறை உணர்ந்து வருந்தி, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பது சிறந்தது. அதோடு சனி பகவானை மனபூர்வமாக வணங்கி, இனி இது போன்ற பாவ செயலை செய்ய மாட்டேன் என கூறி தனக்கு நல்லருள் புரிய வேண்டிக்கொள்ள வேண்டும். சனிக்கிழமையன்று சனிபகவானை வணங்கி எள் தீபத்தை ஏற்றி வழிபட துயரங்கள் தீரும். அதோடு ஏழரை சனி காலத்தில் நியாயமாக நடந்துகொள்பவர்கள் அந்தளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதில்லை.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ