ஆதித்ய மங்கள யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு இனி வாழ்க்கையில் எல்லாம் சுகமே...!

ஆதித்ய மங்கல யோக பலன்கள்: பிப்ரவரி முதல் வாரத்தில் சூரியனும் செவ்வாயும் மகர ராசியில் இணையம் நிலையில் ஆதித்ய மங்கல யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகத்தினால் குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 4, 2024, 07:26 PM IST
ஆதித்ய மங்கள யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு இனி வாழ்க்கையில் எல்லாம் சுகமே...! title=

ஆதித்ய மங்கல யோக பலன்கள்: பிப்ரவரி முதல் வாரத்தில் சூரியனும் செவ்வாயும் மகர ராசியில் இணையம் நிலையில் ஆதித்ய மங்கல யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகத்தினால் குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

மிதுன ராசிக்கான ஆதித்ய மங்கள யோக பலன்கள் 

மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் ஒரு வெற்றிகரமான பாரமாக இருக்கும். உங்கள் சாதுரியத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் வெற்றிகளை குவிப்பீர்கள். நற்பெயரையும் மதிப்பையும் பெறுவீர்கள். முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் பெறலாம். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி நிலவும். ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். பொருளாதார நிலையும் மேம்படும்.

சிம்ம ராசிக்கான ஆதித்ய மங்கல யோக பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் நிம்மதி அளிக்கும் வாரமாக இருக்கும். வேலைகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். அனுபவம் மிக்க நபர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவின் காரணமாக திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் மேம்படும். குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். நிதி ரீதியாக வலுவான நிலையில் இருப்பீர்கள்.

மேலும் படிக்க | Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

கன்னி ராசிக்கான ஆதித்ய மங்கள யோக பலன்கள்

கன்னி ராசிகளுக்கு பிப்ரவரி முதல் வாரம் அருமையான வாரமாக இருக்கும். உங்களைப் பற்றி தவறாக நினைத்து வந்தவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு, உங்கள் அருமையை புரிந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வாழ்க்கையில் சில சங்கடமான சூழ்நிலைகள் வந்தாலும், உங்கள் திறமையினால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். அதிகாரியின் ஆதரவுடன் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதி பிறக்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதனால் லாபமும் உண்டாகும்.

துலாம் ராசிக்கான ஆதித்ய மங்கள யோக பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் வரமாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு மன அழுத்தத்தில் இருந்து வெளியேறி, நிம்மதியான காலத்தை அனுபவிப்பீர்கள். அறிவுத்திறனால் அதிகாரிகளை திருப்திப்படுத்தி அவர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குடும்பத்திலும் என் சந்தோஷமும் நிலவும். போட்டியாளர்கள் அனைவரும் வியக்கும் அளவு, சாதனைகளை செய்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

தனுசு ராசிக்கான ஆதித்ய மங்கள யோக பலன்கள்

தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் பரபரப்பான வாரமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து அனைவரின் பாராட்டையும் அதிகாரியின் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் ஆதாயத்தை கொடுப்பதாகவும் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, குழந்தைகளுடனும் வாழ்க்கைத் துணையுடனும் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News