இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற ‘சில’ சனி கோயில்கள்..!!

சனிபகவான் என்றால் நமக்கு நினைவில் வருவது திருநள்ளாறு. ஆனால் நாடு முழுவதும் சனி பகவானுக்கான பிரசித்தி பெற்ற பல முக்கிய கோவில்கள் உள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 8, 2024, 07:07 PM IST
  • இந்தூரில் சனிதேவனுக்கான பழமையான கோவில் அமைந்துள்ளது.
  • இந்தியாவின் முக்கிய சனி கோவில்களில் ஒன்றான சனி மந்திர், உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கரில் அமைந்துள்ளது.
  • சனி தேவரின் சிலை தினமும் 16 முறை அலங்கரிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற ‘சில’ சனி கோயில்கள்..!! title=

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற சனி கோவில்கள்:  கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கும் நீதி கடவுளான சனீஸ்வரனுக்கு பிரசித்தி பெற்ற பல கோவில்கள் உள்ளன. சனிபகவான் என்றால் நமக்கு நினைவில் வருவது திருநள்ளாறு. ஆனால் நாடு முழுவதும் சனி பகவானுக்கான பிரசித்தி பெற்ற பல முக்கிய கோவில்கள் உள்ளன. அங்கு நீங்கள் சனிபகவானை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் விலகும். சனிதேவரின் சில முக்கிய கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

சனி பகவானுக்கான திருநள்ளாறு கோவில்

சனீஸ்வரனுக்கான திருநள்ளாறு கோவில் தமிழ்நாட்டின் நவக்கிரக கோவில்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் அமைந்துள்ள சனிதேவரின் மிகவும் புனிதமான கோயிலாக கருதப்படுகிறது. சனிதேவரின் கோபத்தால் துரதிர்ஷ்டம், வறுமை மற்றும் பிற மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இக்கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் சனி கிரகத்தின் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

சனி தீர்த்த க்ஷேத்ரம், அசோலா, ஃபதேபூர் பெரி

சனி தீர்த்த க்ஷேத்ரம் டெல்லியில் உள்ள  மெஹ்ராலியில் உள்ளது. எட்டு உலோகங்களால் செய்யப்பட்ட சனி தேவரின் மிகப்பெரிய சிலையை தரிசனம் செய்யலாம். இங்கு வரும் பக்தர்களின் ஆசைகள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இங்குள்ள ஒரு சிலையில் சனிதேவ் கழுகு மீதும் மற்றொன்றில் எருமையின் மீதும் சவாரி செய்கிறார். அசோலா சக்தி பீடத்தைப் பொறுத்தவரை, சனி பகவான் இங்கு விழித்தெழுந்த நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

சனி மந்திர், பிரதாப்கர்

இந்தியாவின் முக்கிய சனி கோவில்களில் ஒன்றான சனி மந்திர், உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கரில் அமைந்துள்ளது, இது சனி தாம் என்று அறியப்படுகிறது. பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாத்கஞ்ச் சந்தையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், வனப்பகுதியில் உள்ள சனி பகவானின் இந்த  பழங்கால புராணக் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதிசயங்கள் நிறைந்த இந்த இடம் அவத் ராஜ்ஜியத்தின் ஒரே புராணகால சனி தாம் என்பதால், பிரதாப்கர் கோவிலுக்கு பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் இறைவனுக்கு 56 வகையான உணவுகள் படைக்கப்படுகிறது.

சனி ஷிங்னாபூர், மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள  சனி ஷிங்னாபூர் கோயில் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரசித்தி பெற்றது. பலர் இந்த இடத்தை சனி தேவன் பிறந்த இடமாகவும் கருதுகின்றனர். இங்கு சனி தேவன் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. இங்குள்ள் கோயில் மற்றும் வீடுகளுக்கு கதவுகள் இருக்காது. ஷிங்னாபூரில் உள்ள இந்த அதிசய சனி கோவிலில் அமைந்துள்ள சனிதேவனின் சிலை சுமார் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஒரு அடி ஆறு அங்குல அகலமும் கொண்டது. சனிதேவரின் இந்த அரிய சிலையைக் காண நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும் படிக்க | உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!

சனி மந்திர், இந்தூர்

இந்தூரில் பழமையான மற்றும் அதிசயமான சனிதேவனுக்கான கோவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப் பழமையான சனி கோவிலாக கருதப்படுகிறது. ஜூனி இந்தூரில் நிறுவப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு சனி பகவான் உண்மையில் வாசம் செய்வதாகவும், சனி பகவானே இந்த கோயிலுக்கு வருகை தந்ததாகவும் நம்பப்படுகிறது. இங்கு சனி தேவரின் சிலை தினமும் 16 முறை அலங்கரிக்கப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் இருக்கும் இடத்தில் 20 அடி உயர மேடு இருந்ததாகவும், அங்கு தற்போதைய அர்ச்சகரின் மூதாதையரான பண்டித கோபால்தாஸ் திவாரி வந்து தங்கியிருப்பதாகவும் ஒரு பிரபலமான கதை உள்ளது. 

 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Trending News