ராசி மாறினார் சூரியன்: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, அதிகபட்ச கவனம் தேவை

Sun Transit: சூரியனின் பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்? எந்தெந்த பரிகாரங்களால் சூரியபகவானின் அருளைப் பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 16, 2023, 07:10 PM IST
  • இந்த கலாத்தில் மிதுன ராசிக்காரர்கள் பேச்சில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
  • பணியிடத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் ஏற்படலாம்.
  • இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
ராசி மாறினார் சூரியன்: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, அதிகபட்ச கவனம் தேவை title=

சூரியன் பெயர்ச்சி, ராசிகளில் பலன்கள்: ஜனவரி 14 இரவு, சூரியன் மகர ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலரது வாழ்வில் சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, ​​அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சூரியனின் பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்? எந்தெந்த பரிகாரங்களால் சூரியபகவானின் அருளைப் பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரிய பகவான் மகர ராசியில்  பெயர்ச்சியாவது மிதுன ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், சூரியன் உங்கள் ஜாதகத்தின் மூன்றாவது வீட்டின் அதிபதியாக உள்ளார். இந்த ஸ்தானம் ஒரு நபரின் தைரியத்தின் உணர்வாக கருதப்படுகிறது. இந்த ராசிக்கு 8வது வீட்டில் சூரியன் சஞ்சரித்துள்ளார். இந்த வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்றது என்கின்றனர் ஜோதிடர்கள். 

இந்த கலாத்தில் மிதுன ராசிக்காரர்கள் பேச்சில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் ஏற்படலாம். இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். 
 
பரிகாரம்: சூரியனின் அசுப பலன்களை தவிர்க்க விரும்பினால், இந்த நேரத்தில் பசுக்களுக்கு சேவை செய்யலாம். கோசாலைகளுக்கு நிதி உதவி செய்யலாம். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.

மகரம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மகர ராசிக்காரர்களின்  ஜாதகத்தின் எட்டாவது வீட்டிற்கு அதிபதியாக உள்ளார் சூரியன். வாழ்க்கையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் தற்செயலான நிகழ்வுகள் இந்த ஸ்தானத்துடன் தொடர்புடையவை. இதனால் பணிகளில் சிறிது காலதாமதம் ஏற்படும். செய்துகொண்டிருக்கும் வேலைகளும் இப்போது நிறுத்தப்படலாம். தந்தை, மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

மேலும் படிக்க | நாளை சனிப் பெயர்ச்சி, இந்த ராசிகளின் கடினமான நேரம் துவங்கும்

பரிகாரம்: பிப்ரவரி 13-ஆம் தேதி வரை தினமும் காலையில் நீராடிவிட்டு சூரியபகவானை வணங்குங்கள். சூரியபகவானுக்கு அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். சமூகத்தில் மரியாதை இருக்கும்.

கும்பம்

மகர ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கும். கும்ப ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தில் 12ம் வீட்டில் சூரியனின் பெயர்ச்சி நடந்தது. இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் மதிப்புமிக்க பொருட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முன்னேற்றத்தில் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில், ஜோதிடத்தின் படி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வணிகத்தில் சிரமங்கள் இருக்கலாம்.

பரிகாரம்: சூரியனின் அசுப பலன்களைத் தவிர்க்க பிப்ரவரி 13 வரை ஆன்மீகப் பணிகளில் முடிந்தவரை ஈடுபடவும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தை மாத ராசி பலன்: தை பிறந்ததால் ‘இந்த’ ராசிகளுக்கு நிச்சயம் வழி பிறக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News