Astro Traits : ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இருக்கும் குணதிசயங்களை பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சில ராசிக்காரர்களுக்கு, இனிமையாகப் பேசி, சாதுர்யமாக தங்கள் வேலையை சாதித்துக்கு கொள்ளும் திறன் உண்டு என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இனிக்க இனிக்க பேசி மற்றவர்களை தன் வசப்படுத்தும் ஆற்றல் பெற்ற ராசிக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு அதிபதி புதன் என்பதால் இவர்களிடம் பேச்சுத்திறன் இயல்பாகவே இருக்கும். காரியத்தை சாதித்துக் கொள்ள, இவர்கள் தங்களுக்கு கிடைத்த எந்த வித வாய்ப்பையும் நழுவ விடாமல் வெற்றி பெறுவார்கள். இதனால், தனிப்பட்ட வாழ்க்கை முதல் தொழில் வாழ்க்கை வரை, மிகுந்த பலன்களை பெறுவார்கள். வியாபாரத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க, இவர்களது இந்த குணம் பெரிதும் கை கொடுக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் எப்போதும் இனிமையாகப் பேசுவார்கள். சண்டை என்பது அவர்களின் அகராதியிலேயே இல்லை. அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பத்தின் வேலையைச் செய்தாலும், மற்றவர்கள் அவ்வாறு உணராத வகையில் பேசுவார்கள். அதனால்தான் அவர்கள் மீது அனைவருக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும் என்பதோடு, அவர்களின் எண்ணத்திற்கு கீழ் படிகிறார்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள்.
மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இயல்பிலேயே சிறிது கூச்ச சுபாவமுள்ளவர்கள் என்றாலும், இவர்களது பேச்சு திறன் அபாரமாக இருக்கும். பொதுவாக விவாதம் புரிந்து, தர்க்கம் செய்வதை விட, தங்கள் கருத்தை மற்றவர்களுக்கு புரிய வைப்பது சிறந்தது என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அதனால்தான் இவர்களது காதல்-திருமண வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அவர்கள் மற்றவர்களின் நலம் விரும்பியைப் போல் நடந்துகொண்டு தங்கள் வேலையை எளிதாக சாதித்துக் கொள்வார்கள்.
மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் நண்பராக நடித்து காரியத்தை சாதித்து கொள்வார்கள். உண்மையில், இவர்கள் தன்னலம் மட்டுமே குறியாக கொண்டவர்கள். காரியம் ஆனதும், திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். இதனால் இவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் இனிமையாகப் பேசுவதில் சிறந்தவர்கள். இவர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம். பல கனவுகளைக் காட்டி , மற்றவர்களை தங்களது வலையில் சிக்க வைத்து காரியத்தை சாதித்து கொள்கிறார்கள். தித்திக்க பேசி மனதை கவருவதில் வல்லவர்கள்.
மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ