Astro: ஜூன் கடைசி வாரத்தில் மகாலட்சுமியின் அருளை முழுமையாக பெற இருக்கும் ராசிகள்

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் அனைத்து 12 ராசி அறிகுறிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2022, 08:34 PM IST
  • கௌரவம், பதவி உயர்வு இருக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
  • கல்வித் துறையில் தொடர்புடையவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
Astro:  ஜூன் கடைசி வாரத்தில் மகாலட்சுமியின் அருளை முழுமையாக பெற இருக்கும் ராசிகள் title=

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் அனைத்து 12 ராசி அறிகுறிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். வார ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. ஜூன் மாதத்தின் கடைசி வாரம் சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தால் மிகவும் மிகவும் அனுகூலமாக இருக்கப் போகிறது. ஜூன் கடைசி வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. கௌரவம் கூடும். வாகனம் வாங்கலாம். பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

சிம்மம் 

உத்தியோகம் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். வருமானம் அதிகரிப்பதன் மூலம் பணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.  இதன் காரணமாக திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

விருச்சிகம்

தடைபட்ட வேலைகள் முடியும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
வருமானம் கூடும். உங்கள் பணி பாராட்டப்படும். வேலையில் வெற்றி உண்டாகும். வேலை மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காலம். 

தனுசு

நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.  புதிய வேலையை ஆரம்பிக்கலாம். வியாபாரிகள் லாபம் அடையலாம். மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். பணமும் லாபமும் இருக்கும், இதன் காரணமாக நிதி பக்கம் வலுவாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரத்தைச் சாதகமாகச் சொல்லலாம்.  மீனத்தில் வசிக்கும் செவ்வாயும், குருவும் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிவார்கள்.

மீனம்

பண வரவு இருக்கும். அதன் காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும்.  கௌரவம், பதவி உயர்வு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.  கல்வித் துறையில் தொடர்புடையவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News