ஜனவரி வரை சனீச்வரரின் கோபப்பார்வையில் வெம்பி வேதனைப்படும் ராசிகள்

Lord Shani: அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசிக்கு மாறிய சனீஸ்வரர், ஜனவரி 17, 2023 வரை அங்கேயே இருப்பார். இதனால் சில ராசிக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2022, 08:08 AM IST
  • மகர ராசியிலேயே இடம் பெயர்ந்துள்ள சனிபகவான்
  • சனீஸ்வரரின் அருளாசியை பெறாத ராசிகள்
  • ஜனவரி வரை நிதானம் தேவைப்படும் ராசிக்காரர்கள்
ஜனவரி வரை சனீச்வரரின் கோபப்பார்வையில் வெம்பி வேதனைப்படும் ராசிகள் title=

புதுடெல்லி: ஜோதிடத்தில் சனி தேவருக்கு தனி இடம் உண்டு. சனி தேவன் ஒரு பாவ கிரகம் என்று கூறப்படுகிறது. சனியின் அசுப பலன்களை கண்டு அனைவரும் பயப்படுகிறார்கள். சனி அசுபமாக இருக்கும்போது, ​​ஒரு நபர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜனவரி 17ம் தேதியன்று சனி பெயர்ச்சி நடைபெற இருக்கிராது. அதுவரை, சில ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், ஏனெனில் சனிபகவானின் அசுப பார்வையால் இவர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசிக்கு மாறிய சனீஸ்வரர், ஜனவரி 17, 2023 வரை அங்கேயே இருப்பார். இதனால் சில ராசிக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  

சனியின் அசுப பலன்களை எதிர்கொள்ளும் ராசிகள்

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தற்போதைய சஞ்சாரம், கவலைகளைக் கொடுக்கும்.  இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களில் இருந்து விலகி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதிகம் பேசாமல் இருந்தாலே பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களுக்கிடையேயான உறவில் மனக்கசப்பு ஏற்படலாம். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | வார ராசிபலன்: மிதுனம், தனுசு எச்சரிக்கை! சிம்மத்திற்கு சிறப்பு 

தனுசு ராசி- ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி விவகாரங்கள் மேம்படும் என்றாலும் திடீர் செலவுகளும் அவ்வப்போது வந்துக் கொண்டே இருக்கும்.

சனீஸ்வரர் பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார். எவ்வளவு பணம் வந்தாலும், சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தமும் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மேலும் படிக்க | பெயர்ச்சியாகும் புதன் மற்றும் சுக்கிரனால் அடித்தது யோகம்: 4 ராசிகளுக்கு அற்புதம் 
 
கும்பம்- கும்ப ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தை மிகவும் கவனமாகக் கடக்க வேண்டும். இந்த நேரத்தில் பணப்பிரச்சனைகள் உங்களின் கவலையை அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியத்தில் சிறிதும் அலட்சியம் காட்டாதீர்கள். அலுவலகத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வாயைக் கட்டுப்படுத்தினால், சிக்கல்களும் கட்டுக்குள் இருக்கும். 

மகரம்- மகர ராசிக்காரர்கள், தங்கள் வாழக்கையில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் நேரம் இது. செலவுகள் கூடும் என்பதைத் தவிர, மனதில் ஆயாசமும், விரக்தியும் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி மகாதசை ஏழரை சனியின் பாதிப்பு யாருக்கு? சனீஸ்வரரை சாந்தப்படுத்தும் பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News