Viral Video: ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் மலைப்பாம்பும் ராஜநாகமும்! மனம் பதற வைக்கும் வீடியோ!

சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படும் எண்ணிலடங்காத ஆச்சர்யமான, அதிசயமான, வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதுவும் சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்பு வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 2, 2022, 02:54 PM IST
  • பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • இரு பாம்புகளுக்கும் இடையே நடக்கும் இந்த சண்டை இதுவரை கண்டிராத ஒன்று எனலாம்.
  • தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Viral Video: ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் மலைப்பாம்பும் ராஜநாகமும்! மனம் பதற வைக்கும் வீடியோ! title=

சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படும் எண்ணிலடங்காத ஆச்சர்யமான, அதிசயமான, வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதுவும் சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்பு வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆக்கிரோஷமாக மோதும், இரு பாம்புகளின் வீடியோ அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் மிகவும் ஆபத்தான ராஜநாகத்திற்கும், பயங்கரமான மலைப்பாம்புக்கும் இடையே நடக்கும் சண்டையை காண முடிகின்றது. இரு பாம்புகளுக்கும் இடையே நடக்கும் இந்த சண்டை இதுவரை கண்டிராத ஒன்று எனலாம்.

பொதுவாக பாம்புகள் மனிதர்களைத் தாக்குவதில்லை. மனிதர்களால் தனக்கு ஆபத்து என நினைக்கும் போது தான் தாக்கும். ஆனால் மனிதர்கள் பாம்புகளைக் கண்டு பயப்படுகிறார்கள். பாம்புகள் பெயரைக் கேட்டால் படையும் நடுங்கும். இருப்பினும், பாம்புகள் வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் வைரலாகின்றன. பாம்புகள் சில சமயங்களில் பரஸ்பரம் கடுமையான சண்டையில் ஈடுபடுகின்றன. அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்கள் திரைப்படங்களில் பாம்புகள் வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம். ஆனால், பாம்புகள் தங்களுக்குள்ளேயே சண்டையிடும் வீடியோவை பார்த்திருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மேலும் படிக்க | Viral Video: கருநாகத்தை கடித்து குதறிய கீரி; சின்னாபின்னமான பாம்பு!

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோவில், ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பும், மலைப்பாம்பும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரண்டு பாம்புகளும் ஒரு கால்வாயில் ஆக்கிரோஷமாக சண்டையிடுகின்றன. ராஜநாகம் பலமுறை மலைப்பாம்பை கடித்து குதறுவது போன்ற காட்சியையும் வீடியோவில் காணலாம். மலைப்பாம்பும் சளைக்காமல் ராஜநாகத்தை தாக்குகிறது. அரச நாகம் மலைப்பாம்பை கொடூரமாக கடிக்கிறது. சில நிமிடங்களுக்கு இரண்டுக்கும் இடையே கடும் சண்டை ஏற்படுகிறது. இந்த வீடியோவை 'nurhidayat hdy' யூடியூப் சேனல் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த காணொளி மூன்று மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும் மீண்டும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஏற்கனவே 75,907 பேர் பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: பின்னிப் பிணையும் மூன்று பாம்புகள்; காதலா.. இல்லை குரோதமா!

மேலும் படிக்க | Viral Video: பாம்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜநாகம்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News