விராட் கோலியின் முதல் திரைப்பட Poster வெளியானது!

கிரிக்கெட் மற்றும் பாலிவுட் ரசிகர்களுக்கு எதிர்பாராத வெள்ளிகிழமையாக இன்று அமைந்துள்ளது!

Last Updated : Sep 21, 2018, 12:23 PM IST
விராட் கோலியின் முதல் திரைப்பட Poster வெளியானது! title=

கிரிக்கெட் மற்றும் பாலிவுட் ரசிகர்களுக்கு எதிர்பாராத வெள்ளிகிழமையாக இன்று அமைந்துள்ளது!

ஆம்... பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி இன்று காலை தனது ட்விட்டர் வாயிலாக தனது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது பிஸியாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அணித்தலைவர் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் பிஸியாகியுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் மட்டும் பிஸியாகவில்லை, திரைதுறையிலும் பிஸியாகிவிடார் என இவரது ட்விட்டர் பதிவு தெரிவிக்கின்றது.

ஆக்ஷன் ஹீரோவாக விராட் கோலி இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தினை கோலி இந்த பதிவில் பகிர்ந்துள்ளார். மேலும் "10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் புது வடிவில் வருகின்றேன் #TrailerTheMovie " என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவானது விராட் கோலியின் பாலிவுட் என்ட்ரிக்கான பதிவாக கருதப்படுகிறது., இல்லையேல் ஒருவேலை இது குறும்படமாகவும் இருக்கலாம், அல்லது தான் பிராண்ட் அம்பேஸிடராக இருந்த வரும் நிறுவனத்திற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த பதிவில் கோலி இணைத்துள்ள வலைதள இணைப்பில் TrailerTheMovie 28.09.2018 என மட்டும் தற்போதைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இந்த பதிவிற்கான விடை வரும் 28.09.2018 அன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது!..

Trending News