பணத்தை திருடிக்கொண்டு நைசாக நழுவும் பாம்பு! அதிரவைத்த வைரல் வீடியா!

Viral Video of Snake Stealing Money: பணத்தை திருடிக்கொண்டு நைசாக ஒரு பாம்பு நகரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Oct 30, 2023, 04:12 PM IST
  • பாம்பு ஒன்று பணத்தை திருடும் வீடியோ வைரலாகி வருகிறது.
  • இந்த வீடியோ ஜிம்பாவேயில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
  • பாம்பு பணம் திருடியதற்கான காரணம் என்ன?
பணத்தை திருடிக்கொண்டு நைசாக நழுவும் பாம்பு! அதிரவைத்த வைரல் வீடியா!  title=

பல நாடுகள், பல கண்டங்கள் என மிகப்பெரிய பிரபஞ்சமாக செயல் படும் இந்த உலகை நம் கையில் உள்ள சிறிய கைப்பேசி மிகவும் சுருக்கி விட்டது. சமூக வலைதளங்கள் அனைத்தும் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது. இவற்றின் மூலமாக பல சமயங்களில் அதிர்ச்சிகரமான விஷயங்களையும் ஆச்சரியமூட்டும் தகவல்களையும் தெரிந்து கொள்கிறோம். அப்படி நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே, பாம்பு என்றாலே மனிதர்களை கடிக்கும் அல்லது பயமுறுத்தும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், எங்காவது பணத்தை திருடிக்கொண்டு போகும் திருட்டு பாம்பை எங்காவது பார்த்துள்ளீர்களா? 

வைரல் வீடியாே:

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு ராட்சத கருநாகம், வாய் நிறைய பணத்தை கவ்விக்கொண்டு ஒரு திண்ணை மேல் ஏறி ஏதோ ஒரு வீட்டிற்குள் செல்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த பாம்பு அவ்வளவு பணத்தை வாயில் கவ்விக்கொண்டு நீண்ட தூரம் ஊர்ந்து சென்றபோதும் ஒரு பண நோட்டு கூட கீழே விழவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாய்பிளந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 10 அடிகளுக்கு மேல் இருக்கும் அந்த பாம்பு கொடிய விஷம் நிறைந்த பாம்பு வகைகளுள் ஒன்றாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்க.. இனி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவே மாட்டீங்க

எங்கு எடுக்கப்பட்ட வீடியோ? 

இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை எங்கே எடுத்துள்ளனர் என்ற விவரத்தையும் பதிவிட்டுள்ளனர். ஆப்பிர்க்க கண்டத்தில் உள்ள ஜிம்பாவே நாட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என அந்த வீடியோ பதிவிற்கு கீழுள்ள கேப்ஷனில் குறிபிடப்பட்டுள்ளது. பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற பாம்பு, “Jira reretso” என்ற வகை துணியை உடுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வகை துணியை வேட்டைக்காரர்கள் மற்றும் முன்னோர்கள்தான் பயன்படுத்தி வந்ததாக ஜிம்பாவே நாட்டில் நம்பப்படுகிறது. மேலும், இந்த துணிக்கும் தெய்வீக சக்திக்கும் பல தொடர்புகள் இருப்பதாக ஜிம்பாவேயில் உள்ள சிலர் நம்புகின்றனர். தற்போது வைரலாகி வரும் அந்த பாம்பு வீடியோவில் அவர்கள் பெரிதாக மதிக்கும் அந்த துணியும் இடம் பெற்றுள்ளதால் இது ஒரு புரியாத புதிராக உள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. 

பாம்பு திருடுமா..? 

நம்ப முடியாத விஷயங்கள் பலவற்றை நாம் படங்கள் மூலமாக பார்த்திருப்போம். பறவை பணத்தை திருடிக்கொண்டு வருவது, நாய் எதையாவது தூக்கிக்கொண்டு ஓடுவது, குரங்கு வித்தை காட்டுவது என பல மிருகங்கள் மனிதர்களின் ஆணைப்படி சில நடவடிக்கைகளில் ஈடுபடும். ஆனால், ஒரு பாம்பு பணத்தை திருடிக்கொண்டு போகும் நிகழ்வு இதுவரை நடந்ததாக தெரியவில்லை. ஏனென்றால், பாம்புகளை முறையான கையாளா விட்டால் உயிரையே இழக்க நேரிடும். இவை, தங்களுக்கு மிகவும் பிடித்த இறையான முட்டை அல்லது குட்டி பறவைகள் ஆகியவற்றை அதன் இருப்பிடங்களில் இருந்து திருடுமே தவிர, வேறு எதையும் திருடாது. அது மட்டுமன்றி, பாம்புகளை தங்களுக்கு ஏற்றார் போல பயிற்சி கொடுத்து சில செயல்களில் ஈடுபட வைப்பது மனிதர்களுக்கு கடினமான காரியம். சிறிய வகை பாம்புகளுக்கு பயிற்சி கொடுப்பது கடினம் எனும் பாேது, இவ்வளவு பெரிய கருநாகத்திற்கு யார் திருட சொல்லி கொடுத்திருப்பர் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. 

மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்க.. இனி நூடுல்ஸ் அ வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News