இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனக்கு பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அவர், திறமையாளர்களை பாராட்டவும் தயங்க மாட்டார். இப்போது அவரை கவனத்தை பெற்றிருப்பவர் ஒரு குட்டி பையன். அந்த சிறுவன் செய்யும் சாமார்த்தியத்தைக் கண்டு வியந்துள்ள அவர், சிறுவனை வெகுவாக பாராட்டியிருப்பதுடன், வெற்றிக்கான சூத்திரத்தையும் அந்த சிறுவனின் செயல் மூலம் விளக்கியுள்ளார்.
மேலும் படிக்க | குதூகலமான குளியல் போட்ட குட்டி யானை! வைரலாகும் வீடியோ
ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு சிறுவன், சிறு நரம்பு சுருள் சுற்றப்பட்ட கம்பிகளை எடுத்துக் கொண்டு ஒரு ஆற்றின் அருகே வருகிறான். பின்னர் அந்த நரம்புகளில் மீன் சாப்பிடும் இரையை வைத்து, நரம்புகளை ஆற்றினுள் தூக்கி வீசிவிட்டு காத்துக் கொண்டிருக்கிறான். சிறிது நேரம் காத்திருக்கும் அந்த சிறுவன், கரையோரம் நிற்க வைத்த கம்பிச் சுருள் திடீரென சுருள ஆரம்பிக்கிறது. உடனடியாக அந்த சுருளை வேகமாக ஓடிச்சென்று கம்பிகளைக் கொண்டு சுருட்டுகிறான். அதில் என்ன இருக்கப்போகிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் வீடியோவின் முடிவில் இரு ராட்சத மீன்கள் சிக்கியிருப்பதை காண முடிகிறது.
This showed up in my inbox without commentary. It is strangely calming to watch in an increasingly complex world. A ‘short story’ that proves: Determination + Ingenuity + Patience = Success pic.twitter.com/fuIcrMUOIN
— anand mahindra (@anandmahindra) April 1, 2022
சிறுவனின் இந்த சாமார்த்தியமான மீன் பிடி வித்தை ஆனந்த் மகேந்திராவை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர், உறுதி + புத்திக் கூர்மை + பொறுமை = வெற்றி என வெற்றிக்கான சூத்திரத்தைகூறியுள்ளார். அதாவது, சிறுவனின் செயலில் இதெல்லாம் இருந்ததாக குறிப்பிட்டுள்ள ஆனந்த் மகேந்திரா, மீன் பிடிக்க வேண்டும் என்ற உறுதியில் வந்து, புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு, பொறுமையாக காத்திருந்து சிறுவன் வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் படிக்க | கடற்கரையோரம் இறங்கிய இடி - மிரள வைக்கும் நேரடிக் காட்சிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR