தமிழ்படம் 2.0: டீசரில் மரண கலாய்! புகைப்படங்கள் இதோ!

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் "தமிழ் படம்". இதன் இரண்டாவது பாகம் தமிழ்படம் 2.0 படத்தின் டீசர்  தற்போது வெளியாகி உள்ளது.

Last Updated : Jun 1, 2018, 04:32 PM IST
தமிழ்படம் 2.0: டீசரில் மரண கலாய்! புகைப்படங்கள் இதோ! title=

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் "தமிழ் படம்". இதன் இரண்டாவது பாகம் தமிழ்படம் 2.0 படத்தின் டீசர்  தற்போது வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் முதல் பாகத்தில் திஷா பாண்டே ஹீரோயினாக நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ், பரவை முனியம்மா ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதே கூட்டணியை வைத்து தமிழ்படம் 2.0 என்ற பெயரில் படமாகப்பட்டு வருகிறது.

இப்படம் மே 25 திரைக்கு வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்படம் 2.0 படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது. இந்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துள்ளது. இந்த டீஸரில் ஏகப்பட்ட படங்களை வைத்து மரண கலாய் கலாய்த்துள்ளனர். 

தமிழ்படம் 2.0 படத்தின் டீசரில் எந்த படத்தை கலாய்ச்சிருக்காங்கனு தெரியுமா? புகைப்படங்கள் இதோ!!

Trending News