திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடும் தமிழக பாஜக!

'யாகாவார் ஆயினும்.. எனத் தொடங்கும் திருக்குறளை, பொருளுடன் இருமுறை தப்பின்றி உச்சரிக்க முடியுமா' என தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கதில், ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Last Updated : Nov 4, 2019, 10:46 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடும் தமிழக பாஜக! title=

'யாகாவார் ஆயினும்.. எனத் தொடங்கும் திருக்குறளை, பொருளுடன் இருமுறை தப்பின்றி உச்சரிக்க முடியுமா' என தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கதில், ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, தாய்லாந்து சென்ற பிரதமர், அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். இதுகுறித்து தமிழக பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காவி நிற உடை, விபூதி, குங்குமத்துடன் திருவள்ளுவர் புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தது. 

இதற்கு எதிர்ப்புகள் பெருகிய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறளை படித்து திருந்த பாருங்கள் எனக் கூறியிருந்தார்."

இந்நிலையில் ஸ்டாலினின் இந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., 

"யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம் @mkstalin" என குறிப்பிட்டுள்ளது. 

மற்றொரு பதிவில், ஸ்டாலின் பேச்சுக்கள் உளரல் நிறைந்தவை, என சூசகமாக குறிப்பிட்டுள்ளது தமிழக பாஜக., இதுகுறித்து பிதவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.. 

"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்"

சில @mkstalin உளறல் பேச்சுகளை நேரலை செய்யும் ஊடகங்கள், பிரதமர் @narendramodi தாய்லாந்தில் தமிழை முன்னெடுத்து ஆற்றிய உரையை இருட்டடிப்பு செய்ததது அறமோ. இதுவே இவர்தம் போலி தமிழ்பற்றின் அழியா சான்று " என குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News