கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ரசிகரிடம் மன்னிப்புக் கேட்டது வைரலாகிறது. சனிக்கிழமையன்று (2022, ஏப்ரல் 9) பிரீமியர் லீக்கில் எவர்டனுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அப்போது, ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்டார் ரொனால்டோ.
இந்த சம்பவம் தொடர்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரது இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
சாம்பியன்ஸ் லீக்கிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய பின்னர், பிரீமியர் லீக்கின் கடைசி இரண்டு போட்டிகளில் யுனைடெட் வெற்றி பெறவில்லை. இதற்கு முந்தைய ஆட்டத்தில் லீசெஸ்டர் சிட்டிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த மான்சென்ஸ்டர் யுனைடெட் கிளப் அணி சனிக்கிழமையன்று எவர்டனுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது.
மேலும் படிக்க | சென்னையை விட்டுக்கொடுக்காத மும்பை! தொடர்ந்து 4வது போட்டியிலும் தோல்வி!
தோல்விக்குப் பிறகு விரக்தியடைந்த ரொனால்டோ, குடிசன் பூங்காவில் உள்ள சுரங்கப்பாதை வழியாக நடந்து செல்லும் போது எவர்டன் ரசிகரின் தொலைபேசியை தரையில் அடித்து நொறுக்கினார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரொனால்டோ ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது மைதானத்தை நோக்கி கைகளைப் தூக்கிக் காண்பிப்பதைக் காணலாம்.
மைதானத்தில் இருந்த ரசிகர்களின் கூற்றுப்படி, ரொனால்டோ ரசிகரின் தொலைபேசியை அவரது கையிலிருந்து தட்டிவிட்டார், அது கீழே விழுந்து நொறுங்கியது. தனது தவறான செயலுக்காக சமூக ஊடகத்தின் மூலம் ரசிகரிடம் மன்னிப்புக் கேட்ட ரொனால்டோ, ஓல்ட் டிராஃபோர்ட்டில் நடைபெறும் போட்டியைப் பார்க்க ரசிகருக்கு அழைப்பு விடுத்தார்.
"கடினமான தருணங்களை எதிர்கொள்ளும்போது உணர்ச்சிகளைச் சமாளிப்பது ஒருபோதும் எளிதானது அல்ல" என்று ரொனால்டோ கூறினார்.
"இருப்பினும், நாம் எப்போதும் மரியாதையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும்.விளையாட்டை விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்று ரொனால்டோ தனது சமூக ஊடகப் பதிவில் எழுதினார்.
"எனது கோபத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும் போட்டியைப் பார்க்க அந்த ரசிகரை அழைக்க விரும்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | ஃபீபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி விதிகளில் திருத்தமா
31 போட்டிகளில் விளையாடி 51 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இந்த நிலைமை ஏமாற்றத்தை அளித்தது.
கடந்த வாரம் பர்ன்லிக்கு எதிராக தோல்வியடைந்த எவர்டன், 27வது நிமிடத்தில் ஆண்டனி கார்டன் மூலம் முன்னிலை பெற்றார். யுனைடெட் ஒரு சில சந்தர்ப்பங்களில் நெருங்கிய போதிலும் சமன் செய்யத் தவறியது, மீண்டும் மூன்று புள்ளிகளை விட்டுக் கொடுத்தனர்.
ரொனால்டோவின் ஆட்டத்தால் யுனைடெட் அணியை சமன் செய்யும் நிலைக்கு அணி வந்தாலும், தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியால், இந்த சீசனில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து சாம்பியன்ஸ் லீக்கில் ஒரு இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மான்செஸ்டர் அணிக்கு குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR