Viral News: அசந்து தூங்கிய திருடன்; அடித்து எழுப்பிய போலிஸ்! மெத்தையால் வந்த சோதனை

நான் வேறொரு அறைக்கு சென்றபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அங்கே ஒரு திருடன் ஜாலியாக தூங்கிக் கொண்டிருந்தான். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 02:55 PM IST
Viral News: அசந்து தூங்கிய திருடன்; அடித்து எழுப்பிய போலிஸ்! மெத்தையால் வந்த சோதனை title=

வைரல் செய்தி: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மூன்று திருடர்கள் திருடும் நோக்கில் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். ஆனால் இந்த மூன்று பேரில் ஒரு திருடன் அறையில் போடப்பட்டிருந்த மெத்தை அழகாக இருந்ததால், அதில் படுத்து மகிழ்ச்சியை அனுபவித்த அவன், சற்று நேரத்தில் உறங்கிவிட்டான். இதற்கிடையில், அவனுடைய கூட்டாளிகள் இரண்டு லட்சம் மதிப்புள்ள பணம் உட்பட மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். காலையில் வீட்டின் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்த அந்த குடும்பத்தினர், வீட்டில் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. சிறிது நேரம் கழித்து ஒரு திருடன் வீட்டின் ஒரு அறையில் இருந்த மெத்தையில் ஜாலியாக தூங்குவதை குடும்ப உறுப்பினர்கள் பார்த்துள்ளனர்.

நமக்கு கிடைத்த ஊடக அறிக்கையின்படி, இந்த சம்பவம் பார்ரா காவல்நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஜரவுலியில் நடந்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பவன் குப்தாவின் வீட்டில் திருட்டு நடந்த  சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று திருடர்களில் ஒருவர் மெத்தையில் படுத்து சிறிது நேரம் கழித்து அவர் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தார். குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில், திருட்டு நடந்த வீட்டிற்கு சென்ற போலீசார், அந்த ​​திருடன் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்தது. 

பாதிக்கப்பட்ட பவன் குப்தா, தனது குடும்பத்தினருடனும் ஒரு அறையில் தூங்கியதாகக் கூறினார். இரவில் திருடர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்தனர். திருடர்கள் அலமாரியை உடைத்து இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம், கொலுசு, காதணிகள் உட்பட ஆபரணங்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக அவர் கூறினார். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

ALSO READ | Viral Video: கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன் - சிதைத்த மனைவி

சம்பவம் நடந்த அடுத்த நாள் நான் எழுந்தபோது, ​​அறையில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறிக் கிடந்தாகக் பவன் கூறினார். அலமாரி லாக்கர்கள் உடைக்கப்பட்டன. அப்பொழுது நான் வேறொரு அறைக்கு சென்றபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அங்கே ஒரு திருடன் ஜாலியாக தூங்கிக் கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தேன். போலீசார் உடனடியாக குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் எனக்கூறினார்.

ALSO READ | மழையில் குளு குளுவென ஆட்டம் போடும் பிக்பாஸ் பிரபலம்: வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News