Bangalore Rapido Uber Driver Viral Video: இந்தியாவின் நகரங்களில் பைக் டாக்ஸிகளின் வளர்ச்சி என்பது சமீப ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. Rapido, Uber, போன்ற பல நிறுவனங்கள் இந்த பைக் டாக்ஸி சேவையை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வழங்கி வருகிறது. இதில் பெரும்பாலும் எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும் இளைஞர்களே பைக் ஓட்டுநர்களாகவும் செயல்படுகின்றனர்.
தனியாரில் வேலைப்பார்ப்பவர்கள் தங்களின் ஓய்வு நேரங்களில் இதுபோன்ற பைக் டாக்ஸியின் டிரைவராக செயல்படுகின்றனர். குறிப்பாக, வேறு பணி இல்லாதவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 18 வயதில் இருந்து 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இதில் டிரைவர்களாக இருக்கின்றனர்.
தினமும் 13 மணிநேரம் வேலை...
இது ஓரளவு எளிமையாக பொதுமக்களுக்கு நன்மையளிப்பதால் நல்ல வரவேற்பும் பெற்றிருக்கிறது எனலாம். பொதுமக்களான பயணிகளுக்கு மட்டுமின்றி, பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் கூடுதல் வருவாயை அளிக்கும் ஒன்றாக உள்ளது. நிச்சயம் தினமும் இதை ஓட்டுவதன் மூலமே, மாதம் நல்ல தொகையை வருவாயாக பெறலாம். இது அவர்களின் செலவுக்கோ அல்லது சேமிப்புக்கோ உதவலாம் அல்லவா...
மேலும் படிக்க | சவப்பெட்டியில் இருந்து முழித்து பார்தத பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..
அப்படியிருக்க தற்போது சமூக வலைதலங்களில் வைரலான வீடியோவில் Uber மற்றும் Rapido நிறுவனங்களில் பைக் டாக்ஸி ஓட்டுநராக இருக்கும் ஒருவர் மாதம் தான் அதன்மூலம் வரக்கூடிய வருமானம் குறித்து கூறியிருந்தது நெட்டிசன்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ Karnataka Portfolio என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த ஓட்டுநர் பெங்களூருவை சேர்ந்தவர் ஆவார். தினமும் 13 மணிநேரம் பைக் டாக்ஸியை ஓட்டும் அவருக்கு மாதம் ரூ.80 ஆயிரம் - ரூ.85 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாக சொல்லியிருக்கிறார்.
A classic Bengaluru moment was observed in the city when a man proudly claimed that he earns more than ₹80,000 per month working as a rider for Uber and Rapido. The man highlighted how his earnings, driven by his hard work and dedication, have allowed him to achieve financial… pic.twitter.com/4W79QQiHye
— Karnataka Portfolio (@karnatakaportf) December 4, 2024
உலகம் போற்றும் டிஜிட்டல் சேவைகள்
பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த பொருளாதாரத்தையும் வெகுவாக பாராட்டினார். "இந்தியாவின் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஒரு புரட்சியைத் தூண்டியுள்ளன.
நமது உள்ளூர் பொருளாதாரத்தை எரிபொருளாகக் கொண்டு, கோடிக்கணக்கான நல்ல ஊதியம் தரும் வேலைகளை உருவாக்குகின்றன. விரைவான டெலிவரிகள், உள்ளூர் சவாரிகள் மற்றும் ஒவ்வொரு மூலையிலும் Paytm QR போன்ற உலகம் போற்றும் டிஜிட்டல் சேவை சூழலை இவர்கள் உருவாக்குகிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.
உழைப்புச் சுரண்டல்
இருப்பினும், சிலர் இதுபோன்ற வேலைகளில் கடுமையான உழைப்புச் சுரண்டலும் இருக்கிறது என கூறுகின்றனர். மாதம் 800 ரைடுகள் ஓட்டினால்தான், அதுவும் ஒரு ரைடில் ரூ.100 வாங்கினால் மட்டுமே இவ்வளவு சம்பாதிக்க இயலும். அதுமட்டுமின்றி ஓட்டுநர்களுக்கு நிறுவனம் சார்பில் சரியான ஊக்கத்தொகை வழங்குபடுகிறதா இல்லையா என்பது கண்காணிக்க அமைப்பு இல்லாததால் இதில் சுரண்டல்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ