வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன. தற்போதும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
ஒரு பாம்பால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் காணப்படும் ஒரு நபரின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. நடைபயணத்தின் போது ஒரு பாம்புக்கு மிக அருகில் சென்றதால் ரத்தம் கொட்டும் அளவு காயம் ஏற்பட்ட ஒரு ஆஸ்திரேலியரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
ஜோய் ஜெய்ன் அன்ற அந்த நபர், கெய்ர்ன்ஸில் உள்ள பெஹானா பள்ளத்தாக்கில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு மரத்தில் மலைப்பாம்பைக் கண்டார். அதை நெருக்கமாகப் பார்ப்பதற்கு அவர் முனைந்தார். தனது கேமராவில் அதை படம் பிடிக்க எண்ணி கேமராவைத் துடைத்தார். ஆனால், அதற்கு பிறகு நடந்த விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோவில், “பெஹானாவுக்கு சற்று மேலே ஒரு அழகான பாம்பு." என ஜோயி கூறுவதை கேட்க முடிகின்றது. ஆனால், அந்த மலைப்பாம்புக்கு தன்னை ஒருவர் படம் எடுப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது. தனது தனிப்பட்ட இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து தன்னை தொந்தரவு செய்ததை அது விரும்பவில்லை.
மேலும் படிக்க | வைரல் வீடியோ: கடவுளே காப்பாத்திரு... எக்ஸாமில் சாமி கும்பிட்டு விடை எழுதும் சிறுவன்
திகிலூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஜோயியை நோக்கி பாய்ந்து, அவரது முகத்தில் கடித்தது. பாம்பு கடித்ததால் உருவான காயங்களிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. அனால், ஜோயி வீடியோ எடுப்பதை நிறுத்தவில்லை. ஜோயி தனது இரத்தம் தோய்ந்த முகத்தில் டி-சர்ட்டைப் பிடித்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது.
“இரத்தம் அதிகமாக வெளிவருகிறது. ஆனால் எனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.
காட்டுப்பகுதியில் இப்படிப்பட்ட விஷ ஜந்துக்களை கண்டால், அவற்றை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் நல்லது என வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பாம்புகள் எந்த காரணமும் இல்லாமல் தாக்குவதோ அல்லது கடிப்பதோ இல்லை. ஆனால், அவற்றுக்கு ஆபத்து வரும் என அவை உணர்ந்தால், எதிரே யார் இருந்தாலும் அவர்களை அவை விட்டுவைப்பது இல்லை என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
மேலும் படிக்க | அடங்கப்பா..ஜெட் வேகத்தில் ஓடி வந்த சிறுத்தை..பதற வைக்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ