கரணம் தப்பினால் மரணம் என்பது இதுதானா? வைரலாகும் சுனாமி மீட்பு வீடியோ

Tsunami Video Viral: பார்க்கவே முடியாத இறுதி நொடிகளின் வீடியோ வைரலாகிறது. சுனாமி அலைகளுக்குள் சிக்கியவரை மீட்கும் மீட்பு வீடியோ. வாழ்வுக்கும் சாவுக்கும் உள்ள வித்தியாசம் கண்ணிமைக்கும் பொழுது மட்டுமே!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2023, 04:47 PM IST
  • வாழ்வுக்கும் சாவுக்கும் உள்ள வித்தியாசம்
  • கண்ணிமைக்கும் பொழுதில் மரணம் வந்து சேரும்
  • லாஸ்ட் செகண்ட் எஸ்கேப்! வீடியோ வைரல்
கரணம் தப்பினால் மரணம் என்பது இதுதானா? வைரலாகும் சுனாமி மீட்பு வீடியோ title=

Great Escape Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன. ஒரு சில நொடிகளில் மிகப்பெரிய விஷயங்களை எளிதாய் புரிய வைக்கும் வீடியோக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஆச்சரியம், அதிர்ச்சி, நன்றி, காதல், பாசம் என பல விஷயங்களை சில புகைப்படங்களும், வீடியோக்களும் ஒற்றை நொடியில் புரிய வைத்து விடுகின்றன.

சமூக ஊடகங்களில் வீடியோ 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் பலராலும் ரசித்து பார்க்கப்பட்டாலும், அதில் வித்தியாசமான அல்லது அச்சம் கொடுக்கும் வீடியோக்கள் அதிகம் விரும்பப்படுவதுடன், பகிரப்பட்டு அதிக அளவில் வைரலாகின்றன. அதிலும் ஆபத்து கால வீடியோக்களில் பல, வைரல் வீடியோக்கள் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.

அதிலும் அவை ’கிரேட் எஸ்கேப்’ தொடர்பானவை என்றால், அவை லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகின்றன.

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

நேரில் பார்க்கவே முடியாதவற்றை, பார்க்க வாய்ப்பு கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களில் ஒன்று தற்போது சமூக ஊடகத்தில் சக்கைபோடு போடுகிறது. இந்த வீடியோ எப்படி இருக்கிறது? பார்த்துச் சொல்லுங்க

இந்த வீடியோவைப் பார்த்தால் தண்ணீருக்குள் தவிக்கும் மனிதரின் நிலையையும், அவரை காப்பாற்ற, தனது உயிரை பயணம் வைக்கும் மற்றொருவரின் ஆச்சரியமான முயற்சியும் வியப்படைய வைக்கின்றன.

அலைகளுக்குள் தத்தளிக்கும் மனிதர்  

ஆசைக்காக கடலில் பயணப்படும்போது, அதில் ஆபத்து குறைவாக இருப்பதில்லை. எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், இயற்கை எப்போது வேண்டுமானாலும் தனது கோர வடிவத்தை வெளிகட்டிவிடும்.

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

இந்த வீடியோவை பார்க்கும் வரையில், கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தைகளை நாம் வெறும் வார்த்தைகளாகவே உணர்ந்திருப்போம். ஆனால், இந்த வீடியோ அதன் உண்மையான பொருளை சில நொடிகளில் உணர்த்திவிடுகிறது. மாட்டிக் கொண்டவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விகளை விட, காப்பாற்றப்போனவரின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

அதிலும், வானைத் தொடும் அளவுக்கு மிக பிரம்மாண்டமான ஆழி அலைகளுக்கு மத்தியில் படகில் பயணிப்பது திரில்லிங்கான அனுபவத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே அளவு த்ரில்லிங்க், இந்த வீடியோவை பார்க்கும் நமக்கும் ஏற்படுவதால், இந்த வீடியோ வைரலாகிறது.

மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News