ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ

Funny Viral Video: ஆசையாய் வந்து காரில் அமர்ந்த கணவனுக்கு மனைவி கொடுத்த அடி உதையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 23, 2022, 02:46 PM IST
  • திருமணம் தொடர்பான ஒரு வித்தொயாசமான வீடியோ வெளியாகியுள்ளது.
  • இந்த வீடியோ மணமக்கள் பற்றிய வீடியோ ஆகும்.
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.
ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ title=

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.

திருமணத்தில் அல்லது திருமணத்திற்குப் பிறகு பல வகையான சம்பவங்கள் நடக்கின்றன. அவை சில சமயம் யதார்த்தமாகவோ, சில சமயம் வேண்டுமென்றோ கேமராவில் கைதாகி, சமூக ஊடகங்களிலும் வைரலாகின்றன. தற்போதும் திருமணம் தொடர்பான ஒரு வித்தொயாசமான காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மணமக்கள் பற்றிய வீடியோ ஆகும்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது. சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவை பார்க்கும்போது, இந்த மணமக்களுக்கு  திருமணம் முடிந்துவிட்டது போல் தோன்றுகிறது. திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் மணப்பெண் தனது மாமியார் வீட்டிற்குச் செல்ல காரில் அமர்ந்துள்ளார். மாப்பிள்ளையும் அவர் அருகில் அமர்ந்திருக்கிறார். ஆனால் அப்போதுதான் மணப்பெண்ணுக்கு திடீரென கோவம் வருகிறது. 

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

மாப்பிள்ளைக்கு செம அடி

வீடியோவின் துவக்கத்தில், மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே அனைத்தும் முதலில் சாதாரணமாக இருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால் சில நிமிடங்களில் திடீரென மணமகளுக்கு கடும் சினம் வருகிறது. இருவரும் காரில் அமர்ந்திருப்பதையும் மணமகள் கோபமான பார்வையுடன் கணவனைப் பார்ப்பதையும் வீடியோவில் காண முடிகிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே மணமகனை மணமகள் தாக்கத் தொடங்குகிறார். மணமகனின் முகத்தை பிடித்து முறுக்குகிறார். 

மணமகன் மீதான மணமகளின் கோபம் இதோடு முடியவில்லை. தன் கணவனின் முகத்தை பிடித்து, உலுக்கி பளார் என அறைகிறார் அந்த பெண். இந்த வீடியோ மிகவும் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. 

வேற லெவலில் சண்டையிட்ட மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

கோபமான மணமகள்

மணம் முடிந்த உடனேயே மணமகன் மீது கடும் கோபம் கொண்ட மணமகள் காரிலேயே வைத்து அவரை அடிக்கத் தொடங்குகிறார். இந்த திருமண வீடியோ bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

‘இன்றே இப்படி என்றால், இந்த நபரின் எதிர்காலம் எப்படி இருக்கும்’  என ஒரு பயனர் மணமகன் மீது பரிதாபம் காட்டுகிறார். ‘கோவக்கார மனைவி...அப்பாவி கணவன்’ என ஒருவர் வேடிக்கையாக எழுதியுள்ளார். இந்த வீடியோவுக்கு பல வித வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News