சிவங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண், வீட்டிலிருந்து 45 பவுன் நகையுடன் தனது Tik tok தோழியுடன் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
தேவக்கோட்டை அருகே உள்ள சானாவூரணியை சேர்ந்தவர் ஆரோக்கியலியோ, கடந்த ஜனவரி மாதம் இவருக்கும் கடம்பாக்குடி கிராமத்தை சேர்ந்த வினிதா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்த 45 நாட்களில் ஆரோக்கியலியோ பணிநிமித்தமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
தனிமையில் இருந்து வினிதா, இணையத்தில் மூழ்கி Tik tok செயலிக்கு அடிமையாகியுள்ளார். Tik tok செயலி மூலம் தனது நட்பு வட்டத்தையும் அவர் விரிவுபடுத்தியுள்ளார்.
அந்த வகையில் வினித்தாவுக்கு, திருவாதவூரைச் சேர்ந்த அபி என்ற இளம்பெண் நட்பு கிடைத்துள்ளது. இருவருக்குமான நட்பு ஆழம் அதிகரிக்க, அபியின் பெயரை தனது முதுகில் பச்சைக்குத்தும் அளவிற்கு வினிதா சென்றுள்ளார். இதனை அறிந்த ஆரோக்கிய லியோ வினிதாவை கண்டித்துள்ளார். எனினும் எந்த பயனும் இல்லை.
இதனையடுத்து இந்தியா திரும்பிய ஆரோக்கிய லியோ, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனிடையே வீட்டில் தான் வைத்திருந்து 20 பவும் நகை மாயமானதை முதலில் கண்டறிந்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு வினிதாவிடம் பதில் இல்லை. இதனையடுத்து வினிதாவை அவரது பெற்றொர் வீட்டில் சென்று விட்டுள்ளார் ஆரோக்கிய லியோ.
இந்நிலையில் தனது தாய் வீட்டில் இருந்த வினிதா திடீரென மாயமாகியுள்ளார். எங்கு உள்ளார், எப்படி உள்ளார் என்று அறியாமல் தவித்த குடும்பத்தார் காவல்துறை உதவி நாடியுள்ளனர். விசாரணையின் போது வினிதா வீட்டில் இருந்த 25 பவுன் நகை மாயமானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வினிதா தனது Tik tok நண்பி அபி-யுடன் நகை எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. மேலும் பல கோணத்தில் விசாரணை மேற்க்கொள்ளப் பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.