ரிஷி சுனாக் - ஆஷிஷ் நெஹ்ரா : கோகினூர் வைரத்தை தூக்க பக்கா பிளான்... அதகளம் செய்யும் மீம்ஸ்!

ரிஷி சுனாக் இங்கிலாந்தின் பிரதமராகியுள்ள நிலையில், அவரைப் போலவே இருக்கும் கிரிக்கெட் ஆஷிஷ் நெஹ்ராவையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை இணையத்தில் குவித்து வருகின்றனர். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 25, 2022, 07:52 AM IST
  • ரிஷி சுனக் இன்று பிரதமராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
  • அதை முன்னிட்டு மன்னர் மூன்றாம் சார்லஸை இன்று சந்திக்க உள்ளார்.
ரிஷி சுனாக் - ஆஷிஷ் நெஹ்ரா : கோகினூர் வைரத்தை தூக்க பக்கா பிளான்...  அதகளம் செய்யும் மீம்ஸ்! title=

வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்க உள்ளார். அந்த பெருமைக்கு சொந்தக்காரரான ரிஷி சுனக்கை பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். 

குறிப்பாக, பல்வேறு நாட்டினரும் ரிஷி சுனக் பிரதமரானதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தியர்கள் தங்களின் மகிழ்ச்சியை வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். 

அதாவது, 42 வயதான ரிஷி சுனக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆஷிஷ் நெஹ்ராவும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. இருவரும், கும்ப மேளாவில் பிரிந்து போன அண்ணன் - தம்பி என ஒருவர் ட்விட்டர் பதிவர் கிண்டல் அடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படத்தை வைத்து ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | பகவத் கீதையும் ரிஷி சுனக்கும்... தீபாவளியில் இங்கிலாந்து பிரதமராக தேர்வு

அதுமட்டுமின்றி, இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிற்கே கொண்டுவர ரிஷி சுனக்கிற்கு நெட்டிசன்கள் பல்வேறு வகையில் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் ஒருவரின் வேடிக்கையான பதிவு மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில்,"ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமரானதும் கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியா கொண்டுவர தன்னிடம் பக்காவான பிளான் இருக்கிறது. ரிஷி சுனக் பிரதமரான பின் அவரை இந்தியாவிற்கு அழைக்க வேண்டும். 

அப்போது இங்குள்ள உறவினர்கள் வீட்டிற்கு வரும்போது, அவரை கடத்த வேண்டும். எப்படியும் அவரை அழைத்துச்செல்லும்போது பெங்களூரு ட்ராப்பிக்கில் மாட்டிக்கொள்வோம். 

அந்த நேரத்தில், ஆஷிஷ் நெஹ்ராவை இங்கிலாந்தின் பிரதமராக அனுப்பிவைத்து, கோகினூர் வைரத்தை இந்தியாவிற்கு திருப்பி அளிக்கும் மசோதாவை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு நிகரான வேறு பிளானே கிடையாது" என பதிவிட்டிருந்தார். 

105.6 காரட் கோகினூர் வைரம் வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தை பிடித்துள்ளது. அந்த வைரமானது, 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக பல்வேறு நபர்களிடம் அந்த வைரம் கை மாறியுள்ளது. 1849 ஆம் ஆண்டில், பஞ்சாபை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு, அந்த வைரம் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போதிருந்து, இது பிரிட்டிஷ் அரச நகைகளில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியா உட்பட குறைந்தது நான்கு நாடுகளுக்கிடையே ஒரு வரலாற்று உரிமைச் சர்ச்சைக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரிஷி சுனக் - ஆஷிஷ் நெஹ்ரா - கோகினூர் வைரம் அனைத்தையும் இணைத்து பலரும் வேடிக்கையான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் ஆவார். இதையும் நெட்டிசன்கள் தங்களின் கன்டெண்டுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். 

மேலும் படிக்க | இங்கிலாந்தின் பிரதமராகிறார் ரிஷி சுனக்! இங்கிலாந்தை ஆளப்போகும் வம்சாவளி இந்தியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News