என்னுடைய ஃபேர்வெல் போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இன்னும் இருக்கிறது. சென்னையில் மீண்டும் போட்டிகள் நடத்தப்படும். அங்கு எனது கடைசி போட்டியில் விளையாடி ரசிகர்கள் முன்னிலையில் விடைபெறுவேன் என்று நம்புகிறேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
ஒரு விசியத்தை அவர் தெளிவுப்படுத்தி விட்டார். அதாவது இந்த ஐபில்எல் தொடருடன் அவர் ஓய்வு பெறப்போவதில்லை. அடுத்த வருடம் தான் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தி விட்டார்.
அவர் கூறியது போல, சேப்பாக்கத்தில் மைதானத்தில் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் விடைபெறுவேன் எனக்கூறியதை வைத்து பார்த்தால், அடுத்த வருடம் தான் ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெறும். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள ஐபிஎல் 2021 சீசனின் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அடுத்த வருடம் அவர் ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிடுவார் எனத்தெரிகிறது.
முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் இந்தக்கருத்து, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால், 40 வயது ஆன தல தோனி ஐபிஎல் 2021 சீசனுக்கு பிறகும் தொடர்ந்து விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் இதற்கிடையில், ஐபிஎல் 2021 பிளேஆஃப் சுற்றில் ஏற்கனவே CSK தங்கள் இடத்தை பதிவு செய்துள்ளது.
ALSO READ | தோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்: ஹாக் அதிரடி
இந்தியா சிமெண்ட்ஸின் 75 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனலில் தோனி, தீபக் சஹார், இம்ரான் தாஹிர், ஸ்ரதுல் தாக்குர் ஆகியோர் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ஒரு ரசிகர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதற்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதியைத் தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அந்த தேதியில் ஓய்வு அறிவித்ததால், உங்களை (தோனி) வழியனுப்பி வைக்கும் ஃபேர்வெல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்காதது குறித்தும் ரசிகர் வருத்தம் தெரிவித்தார்.
ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, என்னுடைய ஃபேர்வெல் போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இன்னும் இருக்கிறது. சென்னையில் மீண்டும் போட்டிகள் நடத்தப்படும். அங்கு எனது கடைசி போட்டியில் விளையாடி ரசிகர்கள் சந்திப்பேன் என்று நம்புகிறேன் எனப் பதில் அளித்தார்.
தனது கடைசி ஆட்டத்தை பற்றி கூறிய எம்எஸ் தோனியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
https://t.co/GlnuitrRjb pic.twitter.com/p3xT35uPfK
— Nischal (@SlowerOne_) October 5, 2021
ஐபிஎல் 2021 தொடரில் தோனியின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் பார்க்கும் போது, அவர் பார்மை இழந்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது. 40 வயதான அவர் தனது முதல் 13 போட்டிகளில் 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் மற்றும் அவரது சராசரி 15 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 100 க்கும் குறைவாக இருக்கிறது. அதேபோல கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 200 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி (Mahendra Singh Dhoni), அக்டோபர் 17 -ம் தேதி தொடங்கும் டி 20 உலகக் கோப்பையில் ( T20 World Cup) பங்கேற்கும் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ALSO READ | IPL 2021: நெட் பயிற்சியில் கலக்கிய தோனி, கலங்கிய மற்ற அணிகள், watch video!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR