ஸ்மார்ட்போன் பார்க்கும் குரங்கின் அலப்பறை.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ

Funny Monkey Viral Video: இந்த வீடியோவில் குரங்கு செய்யும் சேட்டையை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 13, 2023, 04:19 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் i__con_01 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
ஸ்மார்ட்போன் பார்க்கும் குரங்கின் அலப்பறை.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. 

சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு குரங்கு வீடியோ அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இது இணையவாசிகளுக்கு ஆச்சரியம் அளித்துள்ளதோடு அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரல் ஆகி வருகின்றது. மனிதர்களை போலவே மொபைல் போனுக்கு அடிமையாகியுள்ள குரங்கின் வீடியோ ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும், ஒரு புறம் விலங்குகளும் இந்த மொபைல் மோகத்துக்கு பலியாக வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் படிக்க | சின்னஞ்சிறிய பறவைகளின் ரொமான்ஸ்... இணையவாசிகளை கிறங்க வைத்த காதல் வீடியோ!

மொபைல் பார்க்கும் குரங்கு:

வீடியோவில் வண்ணமயமான உடைகளை அணிந்து குரங்கு ஒன்று மெத்தையில் படுத்துக்கொண்டு மொபைல் போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. அது மிக சுவாரசியமாக அதிக கவனத்துடன் போனை பார்க்கிறது. இடையில் யாரோ தன்னை வீடியோ எடுக்கிறார்கள் என்பது தெரிந்து தலையை தூக்கி மேலே பார்க்கிறது. ஆனால், அதன் பின்னரும் அதை பற்றி பெரிதும் அலட்சியம் செய்யாமல் மீண்டும் மொபைல் போனை மும்முரமாக பார்க்கிறது.

மொபைலில் மூழ்கிப்போன குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mb Sidhu (@i__con_01)

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் i__con_01 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். மனிதர்களை போல உடை அணிந்து மனிதர்களை போல மெத்தையில் படுத்து மொபைல் பார்க்கும் குரங்கை பார்த்தால் வேடிக்கையாக உள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் மொபைல் போனுக்கு விலங்குகளும் அடிமை ஆகி விட்டதை எண்ணி சிலர் மனம் வருந்தி கமெண்ட் செய்துள்ளனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இணையத்தில் தீ பற்ற வைத்த ஆட்டம்: அந்த எக்ஸ்பிரஷன்... சான்சே இல்ல.. வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News