குரங்கின் சூப்பர் போல் டான்ஸ்: ‘வாவ்’ என வியக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Funny Monkey Video: இப்படி ஒரு வீடியோவை நீங்கள் பார்த்திருக்க முடியாது. குரங்கு ஒன்று பக்காவான போல் டான்ஸ் ஆடும் விடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2022, 02:30 PM IST
  • சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது.
  • இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
குரங்கின் சூப்பர் போல் டான்ஸ்: ‘வாவ்’ என வியக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். மனிதர்கள் செய்யும் பல வேலைகளை பார்த்து குரங்குகளும் அப்படியே காப்பி அடிக்கின்றன. ஒரு கொம்பை சுற்றி குரங்கு ஒன்று போல் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ இணையவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. குரங்கு ஒரு கல் குன்றின் மீது பொருத்தப்பட்ட ஒரு கம்பத்தைச் சுற்றி நடனமாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | முதலை வடிவில் ராட்சத உடும்பு, அலறியடித்து ஓடிய மான்: வீடியோ வைரல் 

தேதி குறிப்பிடப்படாத இந்த வீடியோவில், மகிழ்ச்சியில் இருக்கும் குரங்கு, கம்பத்தை நன்றாக பிடித்துக்கொண்டு, கைகள் மற்றும் கால்களை ஆட்டி மிக அற்புதமாக நடனமாடுகிறது. குரங்கின் இந்த அபார நடனம் காண்பவர்களை வியக்க வைக்கிறது. தனது அழகான நடன அசைவுகள் மூலம் குரங்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. 

குரங்கின் பக்கா போல் டான்ஸ் விடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவை பார்த்தால், குரங்கு உண்மையில் போல் டான்ஸில் பயிற்சி பெற்றுள்ளதா என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. ஏனெனில் அந்த குரங்கு ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நடனக் கலைஞரைப் போன்ற நெகிழ்வுத்தன்மையுடன் போல் டான்ஸ் ஆடுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'monkey_precious1' என்ற பக்கத்தால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் இதற்கு சிரிப்பு எமோஜிக்களை அள்ளி வீசி வருகிறார்கள். இதற்கு 58k லைக்குகளும் 1.1 மில்லியன் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News