பெண்ணின் மீது ஏறிய குரங்கு செய்த குறும்பு: சிரிக்காம இருக்க முடியாது... வைரல் வீடியோ

Viral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2024, 03:40 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @Mr_mikoo என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • ணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
பெண்ணின் மீது ஏறிய குரங்கு செய்த குறும்பு: சிரிக்காம இருக்க முடியாது... வைரல் வீடியோ title=

Viral Video: சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோகளுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, பாம்பு, குரங்கு, சிங்கம், புலி, யானை என இந்த விலங்குகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். அவ்வப்போது இவற்றின் வீடியோக்கள் வெளிவந்து வைரல் ஆகின்றன. சமீபத்திலும் ஒரு குரங்கின் வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. 

விலங்குகளின் வீடியோக்கள் சில சமயம் அச்சத்தையும், சில சமயம் சிரிப்பையும், சில சமயம் கோவத்தையும் வரவழைக்கின்றன. தற்போது வைரல் ஆகி வரும் குரங்கு வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதை பார்த்தால் ஒரு புறம் சிறிது பதட்டமாக இருந்தாலும், ஒரு புறம் நம்மை அறியாமல் நமக்கு சிரிப்பும் வருகின்றது. 

இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது. அந்த பெண் அச்சத்தில் கத்துகிறார். ஆனால் உடனேயே அந்த குரங்கு எதற்காக தன் மீது ஏறியது என்பதை பெண் புரிந்துகொள்கிறார். அது நேராக அவர் மீது ஏறி அவர் கையில் உள்ள ஜூஸ் பாட்டிலை பிடித்து ஸ்ட்ரா மூலம் ஜூஸ் குடிக்கத் தொடங்குகிறது. 

இதை பார்த்ததும் பெண்ணுக்கு சிரிப்பு வருகிறது. ஆனால், அவருக்கு லேசான அச்சமும் உள்ளது. அவர் முகத்தில் பயத்தையும், சிரிப்பையும் ஒன்றாக காண முடிகின்றது. நிலைமையை சற்று சுதாரித்துக்கொண்டு அவர் குரங்குடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றது. இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இதில் ஆபத்தும் அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க | முதலை கடித்தும் தண்ணீருக்குள் உயிர்பிழைத்த அதிசய மனிதனின் வைரல் வீடியோ

குரங்கு செய்த குறும்பை காட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @Mr_mikoo என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘அந்த பெண்ணிற்கு எப்படி இருந்திருக்கும்? இதை அவர் சிறிதும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்’ என ஒரு பயனர் கூறியுள்ளார். ‘குரங்குக்கு அந்த ஜூஸ் மேலதான் குறி’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘இது மிகவும் ஆபத்தானது’ என மற்றொருவர் கூறியுள்ளார். 

(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)

மேலும் படிக்க | மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News