ஆட்டை காப்பாற்ற தடியைக் கொண்டு புலியோடு போராடிய இளம் பெண்

தன்னுடைய ஆட்டை காப்பாற்ற குச்சியை கொண்டு புலியோடு சண்டை போட்ட மகாராஷ்டிரா இளம் பெண். அதிர்ஷ்டவசமாக மகள் மற்றும் தாயும் உயிர் பிழைத்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 6, 2018, 05:04 PM IST
ஆட்டை காப்பாற்ற தடியைக் கொண்டு புலியோடு போராடிய இளம் பெண் title=

மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தரா மாவட்டத்தில் உஸ்கான் என்ற கிராமத்தை வசித்து 21 வயதுடைய இளம் பெண் ரூபாலி மெஸ்ராம். தான் புலியால் தாக்கப்பட்ட சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில் ரத்த காயங்களுடன் காட்சி அளிக்கும் புகைப்படத்தையும் போட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து ரூபாலி மெஸ்ராம் கூறிகையில், "மார்ச் 24-ம் தேதி இரவு 12.30 முதல் 1 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், வீட்டுக்கு வெளியில் கட்டிவைக்கப்பட்டு இருந்த ஆட்டுக்குட்டியை தாக்க முயன்றுள்ளது புலி. ஆட்டுக்குட்டி அலறும் சத்தத்தை கேட்டு, வெளியே ஓடி வந்த ரூபாலி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அருகில் இருந்த தடியை கொண்டு புலியை தாக்க முயன்றார். ஆனால் ரூபாலி மற்றும் அவரது தாயாரை புலி தாக்கி உள்ளது. காயங்களுடன் தப்பிய நாங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். இந்த விசியத்தை எப்படியாவது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். அப்படி செய்தால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு பலன்கள் கிடக்கும். தயவு செய்து இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள் என தனது முகநூலில் ரூபாலி மெஸ்ராம் கூறியிருந்தார்.

தற்போது இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த தாக்குதல் குறித்து ரூபாலி மெஸ்ராம் கேட்டபோது, புலி தாக்குதலில் ரூபாலி மெஸ்ராம் மோசமாக் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. அவரது தலை, கால்கள் மற்றும் இடுப்பில் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவளுடைய அம்மா தன் நகைகளை விற்று, அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் என கூறினார்.

இதைக்குறித்து பந்தரா வனத்துறை துணை அதிகாரி விவேக் ஹோஷிந்த் கேட்டபோது, ரூபாலியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். அவர்களை புலி தாக்குதலை மறுத்துள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் சிறுத்தைகளின் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன என்று அவர் கூறினார். 

புலியோடு சண்டையிட்ட ரூபாலி மெஸ்ராம் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Trending News