ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்துவைத்த கியூட் சிறுவன்: 'சோ ச்வீட்' என உருகும் நெட்டிசன்கள்

Cute Boy Viral Video:ஆட்டுக்குட்டியை அதன் தாயுடன் சேர்க்க இந்த சிறுவன் எடுக்கும் முயற்சி பலரை மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2022, 11:08 AM IST
  • சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்துவைத்த கியூட் சிறுவன்: 'சோ ச்வீட்' என உருகும் நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குழந்தைகள் மகிழ்ச்சி, அன்பு, கருணை ஆகியவற்றின் ஒரு தொகுப்பு. எந்தவித கல்மிஷமும் இல்லாத பிஞ்சு உள்ளங்களைக் கொண்டுள்ளவர்கள் குழந்தைகள். பெரியவர்களும் அவர்களைப் பார்த்து அவர்களை போல வாழ நினைக்கிறார்கள். 

மேலும் படிக்க | தொட்டு தொட்டு விளையாடுவோமா: சிங்கத்துடன் விளையாடும் குழந்தை, மயங்கிய இணையவாசிகள்

ஒரு ஆட்டுக்குட்டி தனது தாயைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறுவனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரம் மிக நெகிழ்ச்சியாகவும் உள்ளது. 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் ரீல்களில் ‘goodnews_movement’ என்ற பக்கத்தால் பகிரப்பட்டது. “ஆட்டுக்குட்டியை அதன் தாயிடம் சேர்ப்பதற்கு இந்த குழந்தை எவ்வளவு முயற்சி எடுக்கிறது. ஆனால் நாமோ பிறருக்கு உதவ பலமுறை யோசிக்கிறோம்.." என்று பதிவில் எழுதப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ இதுவரை 2.7 மில்லியன் வியூஸ்களையும் 191k லைக்குகளையும் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். பல வகையான கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

தொலைந்து போன சிறிய ஆட்டுக்குட்டியுடன் வயலில் சூப்பர் மரியோ போல் உடையணிந்த சிறுவன் இருப்பதை ரீல் வீடியோவில் காண முடிகின்றது. தன் தாயை பிரிந்துவிட்ட ஆட்டுக்குட்டி அதை தேடி பல இடங்களில் அலைகிறது. தாய் ஆட்டை கண்ட சிறுவன். ஆட்டுக்குட்டியை அதன் தாயை நோக்கி செல்ல திசை காட்டுகிறான். அதற்கு புரிவது போல, அதனுடன் பேசி அதன் தாய் இருக்கும் திசையை சுட்டிக்காட்டி அதை அந்த திசையில் போகச்சொல்கிறான். ஆட்டுக்குட்டி தன் தாயுடன் சேரும்வரை அதனுடனேயே இருக்கிறான். 

சிறுவனின் சூப்பர் கியூட் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். இது பலரை நெகிழ வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பிறர் துன்பத்தை பார்த்து பலர் கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்த காலத்தில், ஆட்டுக்குட்டியை அதன் தாயுடன் சேர்க்க இந்த சிறுவன் எடுக்கும் முயற்சி பலரை மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆமைகளுக்குள் நடந்த வித்தியாசமான போட்டி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News