நியூசிலாந்தி அணிக்கு எதிரான போட்டியில் எளிமையான கேட்சை நழுவவிட்ட விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது...
ஈடன் பார்க் ஆக்லாந்தில் நடைப்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இப்போட்டி நட்சத்திரமாக இருந்தனர். எனினும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு இன்றைய தினம் ஒரு கலவையான தினமாக தான் இருந்தது.
குறிப்பாக களத்தில். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து இரண்டு கூர்மையான கேட்சுகளைப் பிடித்துக் கொண்ட கோஹ்லி, நியூசிலாந்தின் இன்னிங்ஸின் முடிவில் ஒரு எளிதான கேட்சையும் நழுவ விட்டார்.
நியூசிலாந்து இன்னிங்ஸின் 18-வது ஓவரில், பும்ரா வீசிய பந்தில் ரோஸ் டெய்லர் அடித்த கேட்சை இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி நழுவ்விட்டார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில்., நீண்ட நேரம் நின்று, கோஹ்லி பந்தின் கீழ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமாக, பந்து அவரது கைகளில் இருந்து வெளியேறுகிறது.
முதலில் பும்ராவால், அவரது கண்களை நம்ப முடியவில்லை, ஆனால் விரைவில் ஒரு சிறு சிரிப்புடன் இதனை ஏற்றுக்கொண்டார்.
இந்திய கேப்டன் இந்த தவறை ஒப்புக்கொண்டதோடு, இந்திய அணியின் கேட்ச் மற்றும் கிரவுண்ட் ஃபீல்டிங்கை மேம்படுத்துவது குறித்தும் போட்டிக்கு பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய கிரிகெட் அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா 8(6) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனினும் மறு முறையில் கே.எல் ராகுல் இறுதி வரை நின்று விளையாடி 57(50) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஸ்ரேயஸ் ஐயர் 44(33) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 17.3-வது பந்தில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனையடுத்து இந்திய கிரிக்