மத்திய பிரசேதத்தின் பென்ச் புலிகள் காப்பகத்தின் (Pench Tiger Reserve) பெண் புலி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது.இறந்துபோன புலிக்கு சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடத்தும் மனிதாபிமானத்தை இந்தியாவைத் தவிர வேறெங்கே காண முடியும்?
டி-15 என்றும் அழைக்கப்படும் இந்தப் புலி, 2008 முதல் 2018 வரை 11 ஆண்டுகளில் 8 பிரசவங்களில் மொத்தம் 29 குட்டிகளைப் பெற்றெடுத்தது. புலியின் (Tigress in Sanctury) இறுதிச் சடங்கில் உள்ளூர் மக்கள் பலர் கலந்துகொண்டதை சமூக ஊடகங்களில் வெளியாகும் படங்களில் காணலாம்.
இந்த புலிகள் காப்பகத்திற்கு வரும் பார்வையாளர்கள், ஜனவரி 14 அன்று கடைசியாக இந்த தாய்ப்புலியைப் பார்த்தனர்.
அங்கு, மலர் மாலைகளுடன், புலிக்கு கைகளை கூப்பியபடி கடைசியாக பிரியாவிடை கொடுத்ததை அந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.
The legendary tigress from Pench Tiger Reserve also popularly called Collarwali died due to old age, she had brought up 29 cubs in Pench during its lifetime. pic.twitter.com/U219RzykYi
— Anurag Dwary (@Anurag_Dwary) January 16, 2022
மிகவும் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட புலியான T-15இன் இறுதிப் படங்கள், ஊடகங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகிறது.
ALSO READ | இது புல் தின்னும் புலி அல்ல! காரை புல் பண்ணும் புல்லர் புலி!
“சூப்பர் டைக்ரஸ் அம்மா”வுக்கு அஞ்சலி செலுத்துவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் சமூக ஊடகங்களில் தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.
“மத்தியப் பிரதேசத்துக்கு புலி மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்காற்றிய பெண் புலி. 29 குட்டிகளுக்குத் தாயான ‘Super Tigress Mom’ புலிக்கு அஞ்சலி. புலிகள் காப்பகத்தின் ‘ராணி’ என்ற பெயர் பெற்ற இந்த தாயின் கர்ஜனை குட்டிகளின் வாயிலாக மத்தியப் பிரதேச காடுகளில் எப்போதும் எதிரொலிக்கும்.
मप्र को टाइगर स्टेट का दर्जा दिलाने में महत्वपूर्ण भूमिका निभाने वाली, मध्यप्रदेश की शान व 29 शावकों की माता @PenchMP की ‘सुपर टाइग्रेस मॉम’ कॉलरवाली बाघिन को श्रद्धांजलि।
पेंच टाइगर रिजर्व की 'रानी' के शावकों की दहाड़ से मध्यप्रदेश के जंगल सदैव गुंजायमान रहेंगे। pic.twitter.com/nbeixTnnWv
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) January 16, 2022
ட்விட்டரில் மேலும் பலர் புலியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பென்ச் டைகர் ரிசர்வ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உலகப் புகழ்பெற்ற ‘காலர்வாலி’ புலி டி-15 சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் கர்மஜிரி பகுதியில் உள்ள பீட் கும்பதேவ் என்ற இடத்தில் தனது உயிர் பிரிந்தது.
ALSO READ | வால்பாறையில் ஆட்டை வேட்டையாடும் சிறுத்தை புலி
சுமார் பதினாறரை வயது நிறைவடைந்த பெண் புலி, வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது. உடல்நலம் குன்றியிருந்த புலியை, பூங்கா நிர்வாகத்தின் வனவிலங்கு மருத்துவர் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு புலியின் சராசரி ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகள் ஆகும்.
'காலர்வாலி' புலி, 2008 மே மாதம் முதல் முறையாக மூன்று குட்டிகளையும், 2008 அக்டோபரில் நான்கு குட்டிகளையும், 2010 அக்டோபரில் ஐந்து குட்டிகளையும், 2012 மே மாதத்தில் மூன்று குட்டிகளையும், 2013 அக்டோபரில் மூன்று குட்டிகளையும், 2015, 2017 ஏப்ரலில் தலா நான்கு குட்டிகளையும் ஈன்றது. 2018 டிசம்பரில் நான்கு குட்டிகளையும் ஈன்றது.
ALSO READ | வால்பாறை நகருக்குள் உலா வரும் சிறுத்தை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR