காலா படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியீ்டு!! விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பை நடிகை தனுஷ் தனது டிவிட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Last Updated : May 9, 2018, 09:44 AM IST
காலா படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியீ்டு!! விவரம் உள்ளே title=
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பை நடிகை தனுஷ் தனது டிவிட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
 
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
இதையடுத்து, இப்படத்தின் இசை வரும் மே 9-ஆம் நாள் (இன்று) வெளியாகும் என ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தின் தெரிவித்து இருந்தார்.
 
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காலா படத்தின் பாடல்களை தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் இணையதளத்தில் வெளியிட்டார். 
காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த இசைவெளியீட்டு விழாவானது நேரலையாக டிவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது. சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.
 
வண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக, இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும், தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் தற்போது இன்று காலா படத்தின் பாடல்களை தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் இணையதளத்தில் வெளியிட்டார். 

Trending News