Viral Video: இணைய உலகத்தின் தாக்கமும் வீரியமும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக மாறிவிட்டது. பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமான இணையத்தின் உதவியால், பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இணையத்திலும், சமூக ஊடகங்கள் மிகவும் பிரபலமானவை. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு செய்திகளை மட்டுமா வழங்குகின்றன?
கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் மாறிவிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை பதிவேற்றி பிறருக்கும் பல தகவல்களை பகிரும் பலர் உள்ளனர். சிலரின் வீடியோக்கள் அருமையாக இருந்தால், பலருடையது வேடிக்கையானதாக இருக்கும்.
அதிலும், இணையத்தில் பகிரப்படும் விலங்கு வீடியோக்கள் இணையவாசிகளை அதிக அளவில் கவர்கின்றன. விலங்குகளைப் பற்றிய நமது கணிப்புகளும், கால மாற்றத்தால் அவற்றின் குணாதிசயங்களும் வாழ்க்கை முறைகளை மாறியதையும் வீடியோவில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அறியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை வீடியோக்களின் மூலமாக நாம் பார்க்கிறோம். இவற்றில் பல ஆச்சரியப்படுத்துகின்றன.
அப்படி ஒரு வீடியோ தான் எக்ஸ் வலைதளத்தில் சமீபத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்தால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உணவு தேடல் என்பது எந்த அளவிற்கு வந்துவிட்டது என்ற சிந்தனையைக் கொடுக்கும் வீடியோ இது...
In Nara, deers have learned to open the doors of food establishments and bow to ask for food. pic.twitter.com/w58NyaCVkC
— Nature is Amazing (@AMAZlNGNATURE) October 13, 2024
இந்த வீடியோவின் எழுப்பும் கேள்விகள் பல. ஒரு ஹோட்டலுக்கு வந்து அதன் கதவைத் திறக்கத் தெரிந்த விலங்குக்கு உள்ளே செல்ல முடியாதா? அது எப்படி நாகரீகம் தெரிந்த மனிதர்களைப் போல, வெளியே நின்று ‘மே ஐ கம் இன்’ என்று கேட்பதைப் போல சைகை காட்டுகிறது என்ற கேள்வி எழுகிறது.
மான்கள் நகரில் சுற்ற்த் திரிவது ஆச்சரியம் அளிப்பதுடன், இது எந்த ஊர், எந்த நாடு என்பதையும் தெரிந்துக் கொள்ளும் ஆவலும் எழுகிறது. இப்படி இந்த சில நொடிகள் மட்டுமே செல்லும் வீடியோ நம்மை பல கேள்விகள் கேட்க வைத்தால், அதற்கான பதிலைத் தேடி மீண்டும் மீண்டும் வீடியோவை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அன்பின் மொழியை விலங்குகளும் நன்றாக புரிந்து கொள்கின்றன என்பதை காட்டும் வீடியோக்களைப் பார்த்திருந்தாலும், பவ்யமாக வெளியே நின்று கதவைத் திறந்து பதிலுக்கு காத்திருக்கும் பண்பு ஆச்சரியமளிக்கிறது. அந்த ஹோட்டலுக்குள் மான்களுக்கு அனுமதி கிடைக்குமா? உள்ளே சென்றால் என்ன உணவு கிடைக்கும் என வேறு பல கேள்விகளும் எழுகின்றன. கேள்விகள் அனைத்திற்கு உரிய பதில் கொடுப்பது இந்த வீடியோக்களின் நோக்கமல்ல. இவற்றின் நோக்கம், வித்தியாசமான நிகழ்வுகளை பதிவிடுவது மட்டுமே...
(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ