குழந்தையை போல சறுக்கி விளையாடும் ஆட்டுக்குட்டி! வைரல் வீடியோ!

ஆட்டுக்குட்டி ஒன்று வீட்டின் வாசல் படியில் வாகனம் ஏற்ற ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும் சறுக்கல் போன்ற பகுதியில் உற்சாகமாக சறுக்கி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 9, 2022, 09:28 AM IST
  • சறுக்கி விளையாடும் ஆட்டுக்குட்டி.
  • குழந்தையை போல ஜாலியாக விளையாடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
குழந்தையை போல சறுக்கி விளையாடும் ஆட்டுக்குட்டி! வைரல் வீடியோ! title=

தாவர உண்ணி மற்றும் பாலூட்டி வகையை சேர்ந்த ஆடு இனமானது பழங்காலமாக மனிதர்களால் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.  நாய், பூனை போன்று செல்ல பிராணிகளாக இவை வளர்க்கப்படுவது மட்டுமின்றி இவை வருமானத்தை ஈட்ட உதவுவதாகவும் உள்ளது, பெரும்பாலானவர்கள் ஆடுகளை இறைச்சி, பால், தோல் போன்றவற்றிற்காக வளர்த்து வருகின்றனர்.  என்னதான் இவை விலங்குகளாக இருந்தாலும் சில சமயம் இவற்றின் செயல்கள் குழந்தைகள் செய்யும் குறும்புகளை போல இருக்கிறது, அந்த சேட்டைத்தனம் பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  பூங்காக்களில் குழந்தைகள் விளையாட வைக்கப்பட்டிருக்கும் சறுக்கு மரத்தில் சறுக்கி விளையாடுவது போன்று ஒரு ஆட்டுக்குட்டி விளையாடும் காட்சி பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மேலும் படிக்க | நம்முடைய டிரஸ்ஸை கண்டுபிடிப்பது எப்படி? உலகிற்கே எடுத்து கூறிய அஸ்வின்!

பொதுவாக மனிதர்கள் தான் இதுபோன்று விளையாடி பார்த்திருப்போம் ஆனால் இப்போது விலங்கினங்களும் மனிதர்களை போலவே விளையாட தொடங்கிவிட்டது.  இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, பெரும்பாலும் புதிதாக கட்டக்கூடிய வீடுகளில் வாகனங்களை ஏற்றுவதற்கு வசதியாக வாசற்படியில் சறுக்கல் போன்ற ஒரு அமைப்பை வடிவமைக்கின்றனர்.  அதுபோல இந்த வீடியோவில் ஒரு வீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அந்த வீட்டின் வாசலில் சில ஆட்டுக்குட்டிகள் அமர்ந்திருக்கிறது.  அப்போது ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் சின்னப்பிள்ளை போல அந்த சறுக்கலில் ஏறி சறுக்கி சறுக்கி விளையாடிக்கொண்டு இருக்கிறது.

 

சிறு பிள்ளைகள் செய்வதை போலவே இந்த ஆட்டுக்குட்டியின் செயலும் அமைந்திருப்பதை பார்க்கையில் அழகாக இருக்கிறது, இணையவாசிகள் பலரையும் இந்த வீடியோ கவர்ந்துள்ளது.  இந்த வீடியோ ஏராளமான பார்வைகளையும், லைக்குகளையும், கமென்டுகளையும் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | மாணவியை திருமணம் செய்துகொள்ள ஆணாக மாறிய ஆசிரியை!

Trending News