மாயமாகப்போகும் எதிர்காலத்தை புரிய வைக்கும் வீடியோ வைரல்

புவி வெப்பமயமாதலைக் விளக்கும் வீடியோ காண்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அல்லாமல் நெஞ்சை பதைபதைக்கவும் வைக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2022, 09:06 PM IST
  • புவி வெப்பமயமாதலை விளக்கும் வீடியோ
  • காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது
மாயமாகப்போகும் எதிர்காலத்தை புரிய வைக்கும் வீடியோ வைரல் title=

உலகளவில் புவி வெப்பமயமாதல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகரிப்பு, அதனால் ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆர்டிக் துருவப் பகுதிகளில் உருகும் பணிக்கட்டிகளின் வேகமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்கும் இயற்கை நிபுணர்கள், உலக நாடுகளை கடுமையாக எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உலக நாடுகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. 

மேலும் படிக்க | Viral Video: வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான மாடுகள் - கரைசேர்த்த மீனவர்

பருவநிலை மாற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட பாரீஸ் ஒப்பந்தமும் முழுமையாக செயல்வடிவம் பெறவில்லை. இதன் மூலம் ஆண்டு தோறும் சமச்சீரற்ற முறையில் மழைப்பொழிவு அதிகரித்து, வெயிலும் வறட்சியும் வரலாறு காணாத வகையில் வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு சில மாதங்கள் மழை பொழிகிறது என்றால், ஒரு சில மாதங்கள் வெயில் வாட்டி வதைக்கிறது. இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மற்றும் சமச்சீரற்ற தன்மை, வாழும் மனிதர்களையும், தாவரங்களையும், அடிப்படை மூலாதரமான உணவுச் சங்கிலியையும் முழுமையாக பாதிக்கிறது.

இந்த பாதிப்பு தொற்றுநோய்கள் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மூலமாக அமைகின்றன. இவை குறித்து உலக நாடுகள் தெரிந்திருக்கும்போதும், கடுமையான நடவடிக்கையை எடுக்க முன்வரவில்லை. இருப்பினும் ஒரே ஒரு வீடியோ மூலம் புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், அம்மாவுடன் மகன் இருப்பதுபோன்று பனிக்கட்டியில் வடிவமைக்கப்பட்ட உருவம் பொதுவெளியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. வெப்பமயமாதலுக்கு ஏற்ப அந்த மகன் வடிவத்தில் இருக்கும் பனிக்கட்டி உருகுகிறது. ஒருகட்டத்தில் அம்மா மட்டும் இருக்கிறார். மகன் பனிக்கட்டி முழுமையாக கரைந்துவிடுகிறது. புவி வெப்பமயமாதல் குறித்து உலக நாடுகள் கவலை கொள்ளாவிட்டால், எதிர்கால சந்ததிகள் இங்கு இருக்காது என்பதை இந்த வீடியோ சில நிமிடங்களில் உணர்த்திவிடுகிறது.

மேலும் படிக்க | Viral Video: ரோபோவுடன் சிறுவன் விளையாடிய CHESS; தவறுக்கு கை விரலை முறித்த ROBOT

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News