இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார்!
தந்தையர் தினமானது, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், ஜூன் மாத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டி, முதல் நண்பன், ஆலோசகர் யாரெனில் தந்தையைத் தவிர வேறுயாரும் இருக்க முடியாது. அப்படிபட்ட அப்பாவைக் கொண்டாட சிறந்த வாய்ப்புதான் தந்தையர் தினம். இந்த தினத்தை உங்கள் அப்பாவின் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும்படியாக மாற்றுங்கள்.
இந்நிலையில், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்து கருத்து ஒன்றை சமூகவளைதலத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர். உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
என்று நான் வாழ்ந்ததாகச்
சொல்லுவார் தலைவர் கலைஞர்.அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர்.
உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து
தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்! #HappyFathersDay #MissUappa pic.twitter.com/RNINuckK05— M.K.Stalin (@mkstalin) June 16, 2019