தொட்டு தொட்டு விளையாடுவோமா: சிங்கத்துடன் விளையாடும் குழந்தை, மயங்கிய இணையவாசிகள்

Cute Child Viral Video: குழந்தையை பார்த்து மயங்கி நிற்பது இணையவாசிகள் மட்டுமல்ல, அந்த சிங்கமும்தான் என்பது வீடியோவை பார்த்தால் புரிகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2022, 06:32 PM IST
  • சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தொட்டு தொட்டு விளையாடுவோமா:  சிங்கத்துடன் விளையாடும் குழந்தை, மயங்கிய இணையவாசிகள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீபத்தில், ஒரு சிறுமி தனது வீட்டு முற்றத்தில் கரடியைக் கட்டிப்பிடிக்க ஓடிய வீடியோ வைரலானது. அதிர்ஷ்டவசமாக, சரியான நேரத்தில் அவரைப் பார்த்த அவரது தாயார் தனது மகளை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினார். பள்ளிகளில் விலங்குகளை பற்றி படிக்கும் குழந்தைகள் புத்தகங்களில் அவற்றின் படங்களைப் பார்க்கிறார்கள். அவற்றால் ஈர்க்கப்படுகிறார்கள். 

மேலும் படிக்க | மல்லாக்க படுத்து தூங்குறதுல என்னா சுகம்... வைரலாகும் பூனை தூங்கும் வீடியோ 

ஆனால் அவை ஆபத்தானவை என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. விலங்குகளை பார்த்தவுடன் குழந்தைகளுக்கு அவை அழகான பொம்மைகளாகவே தெரிகின்றன. 

குழந்தை ஒன்று சிங்கத்தை அன்புடன் பார்த்து அதனுடன் விளையாட முயற்சிப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘nature___.beauty’ என்ற பக்கத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரி 1.1 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 28 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. 

இந்த வீடியோவில், ஒரு சிங்கம், மிருகக்காட்சிசாலையில் தனது கூண்டில் அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. அப்போது அங்கு வரும் ஒரு ஆண் குழந்தை சிங்கத்துடன் பேசி அதனுடன் பழக முயல்வதைக் காண முடிகின்றது. 

சிங்கம் அமைதியாக அமர்ந்து, கண்ணாடி வழியாக மூக்கைத் தொட முயற்சிக்கும் சிறுவனைப் பார்த்து ரசிக்கிறது. வீடியோவில் பார்க்கும்போது, ஒரு நொடி, குழந்தைக்கும் சிங்கத்துக்கும் இடையே கண்ணாடிச் சுவர் இல்லையோ என்பது போல் தெரிகிறது. சிங்கம் கூண்டுக்குள் இருந்தாலும், அந்தத் துணிச்சலான குழந்தை அதன் அருகில் செல்ல சிறிதும் அச்சப்படவில்லை. குழந்தையின் தைரியத்தையும் அது சிங்கத்துடன் பேச முயலும் அழகையும் இணையவாசிகள் ரசித்துப் பார்க்கிறார்கள். 

கூல் குழந்தையின் சூப்பர் கியூட் பாசத்தை இந்த வீடியோவில் காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@nature___.beauty)

இந்த கியூட்டான வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. குழந்தையை பார்த்து மயங்கி நிற்பது இணையவாசிகள் மட்டுமல்ல, அந்த சிங்கமும்தான் என்பது வீடியோவை பார்த்தால் புரிகிறது. 

மேலும் படிக்க | மணமகளை பார்த்து தேம்பி அழுத மணமகன், காரணம் இதுதான்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News