Lion Hunt Video: சிங்கங்களின் இரையாக மாறிய காட்டெருமை வீடியோ வைரல்

Buffalo Prey Video: சிங்கக் கூட்டத்திற்குள் சிக்கிய காட்டெருமை! இரையாக மாறியதா இல்லை தப்பித்து தாக்கியதா? வென்றது யாரு? வீடியோ வைரல், ஆனால் இரையாக மாறிய பரிதாபம் பார்க்க சகிக்கவில்லை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2023, 06:24 PM IST
  • காட்டெருமையைத் தட்டித் தூக்கும் சிங்கங்கள்
  • சிங்கக்கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமான விலங்கு
  • சிங்கங்களின் இரையாக மாறிய காட்டெருமை வீடியோ வைரல்
Lion Hunt Video: சிங்கங்களின் இரையாக மாறிய காட்டெருமை வீடியோ வைரல் title=

 Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாக இருந்தாலும், தொடர்ந்து இதைப் பார்த்து, மொபைலிலேயே மூழ்கிப் போனக் கூட்டமும் இருக்கிறது. அவர்களுக்கு, வேறு எதைப் பற்றியும் கவலையில்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், இணையத்தில் பல விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன. 

விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மேலும் படிக்க | Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா?

காட்டில் சிங்கங்களும் புலிகளும் மற்ற விலங்குகளை வேட்டையாடும் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் சிங்கக்கூட்டத்திற்குள் சிக்கிய காட்டெருமையின் வீடியோ அதிர்ச்சியளிக்கிறது. இது காட்டில் இயல்பாக நடைபெறும் விஷயம் என்றாலும், பார்க்கும் நம்மை பதைபதைக்க வைக்கும் சிங்க வேட்டை வீடியோ இது.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான சிங்கங்களின் தாக்குதல் வீடியோ, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. சிங்கங்களின் கூட்டம் தனியாக சிக்கிக்கொண்ட ஒரு காட்டெருமையை, பாடாய் படுத்துவதை வீடியோவில் காண முடிகின்றது.

சிங்கம் - எருமை வீடியோ
காட்டில் நடைபெறும் சிங்கங்களின் தாக்குதல் வீடியோ, இரைக்காக சிங்கங்கள் எப்படித் தாக்கும் என்பதைக் காட்டுகிறது. வீடியோவில் முதலில் ஒரு சிங்கம் தாக்குக்வது தெரிகிறது. பிறகு, பல சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்துத் தாக்கும் காட்சிகள் பார்த்தாலே அச்சத்தை ஏற்படுத்துகின்றன.  

மேலும் படிக்க | Wild Buffalo Hunt: காட்டுப்பூனையை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்

இந்த காட்டு ராஜாக்களின் வேட்டை வீடியோ, animals_powers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பகிர்ந்து, வைரலாக்கி வருகின்றனர். 

கூட்டமாக இருக்கும் சிங்கத்தின் இடையில் மாட்டிக் கொண்டால் எந்த விலங்காக இருந்தாலும் என்னவாகும் என்பதற்கு உதாரணமாய் இருக்கும் வீடியோ இது. கையிலே மாட்டினா, நீ காலி தான் என்று சொல்லாமல் சொல்லும் சிங்கங்களின் வேட்டை இது. இது போன்ற பல வீடியோக்கள் தினசரி வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News