ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வுகள் அதிகமாக பகிரப்படும் சூழலில், சிலர் யூடியூப் லைக்குகளுக்காக வித்தியாசமாக செய்யும் வீடியோக்கள் மக்களை தவறாக வழிநடத்துவதும் மட்டும் இல்லாமல் உணவு முறையையும் கெடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அது ஆரோக்கியத்துக்கு பெரும் தீங்கு என கமெண்டில் திட்டினாலும் அப்படி வீடியோ எடுப்பவர்களுக்கு துளியும் கவலையில்லை. அவர்களுக்கு அதிக பார்வைகள் வந்து, பணம் வந்தால் போதும் என்பதற்காக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் மாம்பழ ஜூஸைக் கொண்டு ஆம்லெட் செய்யும் வீடியோ பகிரப்பட்ட நிலையில், இப்போது ஒருவர் பீர் ஊற்றி ஆம்லெட் செய்யும் வீடியோ யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பூனையை காப்பாற்றும் நாய்: நெட்டிசன்களை உலுக்கிப்போட்ட வைரல் வீடியோ
அதில், சிற்றுண்டி கடைக்காரர் எண்ணெய்க்குப் பதிலாக பீர் பயன்படுத்துகிறார். பின்னர் அவர் காய்கறிகளுடன் முட்டை கலவையை பாத்திரத்தில் ஊற்றி சமைக்கிறார். அடுத்து ஆம்லெட்டை நசுக்கி புர்ஜியாக மாற்றி, அதன் மேல் சில மசாலாப் பொருட்களைப் போட்டு, தனது வாடிக்கையாளருக்கு 'சுவையான' உணவை பரிமாறுகிறார். இந்த வைரலான வீடியோஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் வீடியோ கடும் எதிர்வினைகளை மட்டுமே பெற்றிருக்கிறது. கமெண்ட் அடித்த ஒரு பயனர் எழுதினார், "அடுத்த ஆக்ஸ் பெர்ஃப்யூம் ஆம்லெட்டிற்காக நான் காத்திருக்கிறேன் அண்ணா" என எழுதியுள்ளார். கடந்த மாதம், ஆம்லெட் ஆசையையே விடவைக்கும் வகையில் மற்றொரு வீடியோ வெளியானது.
அதில், மாம்பழ ஆம்லெட் போடப்பட்டது. இந்த வீடியோ குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டார். அந்த வீடியோவில் ஒரு விற்பனையாளர் தவாவில் எண்ணெய் சேர்த்து இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றியதுடன், மசாலா சேர்க்கிறார். பின்னர், பொரித்த முட்டையுடன் மாம்பழச் சாறு சேர்கிறார். பார்க்கும்போது முகம் சுழிக்க வைக்கும் வகையில் இந்த வீடியோ இருக்கிறது.
மேலும் படிக்க | சவாரி செய்ய போய் பல்பு வாங்கிய நபர்: மாஸ் காட்டிய குதிரை.... வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ