வாஜ்பாயி-னை கௌரவிக்கும் வகையில் அமுல் நிறுவனம் Cartoon!

மறைந்த முள்ளான் பிரதமர் வாஜ்பாயி அவர்களை கௌரவிக்கும் வகையில் அமுல் நிறுவனம் கார்டூன் வரைபடம் வெளியிட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2018, 07:04 PM IST
வாஜ்பாயி-னை கௌரவிக்கும் வகையில் அமுல் நிறுவனம் Cartoon! title=

மறைந்த முள்ளான் பிரதமர் வாஜ்பாயி அவர்களை கௌரவிக்கும் வகையில் அமுல் நிறுவனம் கார்டூன் வரைபடம் வெளியிட்டுள்ளது!

இந்திய அரசியல் தலைவர்களுள் முக்கியமானவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் ஆகஸ்ட்., 17-ஆம் நாள் மாலை 5.05 மணியளவில் உடல்நல குறைவால் டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார்.

வாஜ்பாயி அவர்களின் மறைவினை அடுத்து நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. மறைந்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் நன்முறையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரபல டெய்ரி நிறுவனமான அமுல் நிறுவனம் வாஜ்பாயி அவர்களை கௌரவிக்கும் வகையில் கார்டூன் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. 

இப்படத்தில் அமுல் சிறுமி வாஜ்பாயி அவர்களிடம் பாடம் படிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிகழும் தினசரி நிகழ்வுகளை மையப்படுத்தி சித்திரங்களை வெளியிட்டு வரும் அமுல் நிறுவனம் தற்போது வாஜ்பாயி அவர்களின் இழப்பினை நினைவுகூறும் விதமாக இந்த சித்திரத்தினை வெளியிட்டுள்ளது.

Trending News