இன்று மாலை தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், "சமூக ஊடக கணக்குகளை அல்ல, வெறுப்பைக் கைவிடுங்கள்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று பிற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது சமூக ஊடக கணக்குகளான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பின் என எனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசித்து வருகிறேன். மற்றும் அனைவரையும் இடுகையிட வைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக ராகுல் காந்தி அவரது பதிவை மேற்கோளிட்டு காட்டுகையில்., "சமூக ஊடக கணக்குகளை அல்ல, வெறுப்பைக் கைவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
Give up hatred, not social media accounts. pic.twitter.com/HDymHw2VrB
— Rahul Gandhi (@RahulGandhi) March 2, 2020
அதேவேளையில் காங்கிரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இதுகுறித்து குறிப்பிடுகையில்., "மரியாதைக்குரிய மோடி ஜி, உங்கள் பெயரில் ஒவ்வொரு நொடியும் மற்றவர்களை துஷ்பிரயோகம்-மிரட்டல்-பேட்ஜர்-அச்சுறுத்தும் பூதங்களின் ஒருங்கிணைந்த இராணுவத்திற்கு நீங்கள் இந்த ஆலோசனையை வழங்க விரும்புகிறீர்களா!" அன்புடன், உண்மையுள்ள இந்திய குடிமக்கள்" என குறிப்பிடுள்ளார்.
Respected Modi ji,
Earnestly wish you would give this advise to the concerted army of trolls, who abuse-intimidate-badger-threaten others every second in you name!
Sincere Regards,
Citizens of India. https://t.co/hGtf64Fyf9— Randeep Singh Surjewala (@rssurjewala) March 2, 2020
பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் அதிகம் பின்தொடர்பவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுடன் தொடர்பில் இருக்க அவர் பெரும்பாலும் சமூக ஊடகங்களையே பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது சமூக ஊடக கணக்குகளை விட்டுக்கொடுப்பது குறித்து யோசிக்கையில் தலைப்பு செய்தியாய் இந்த தகவல் உருவெடுத்துள்ளது.
எனினும் பிரதமர் மோடியின் இந்த பதிவை பல்லாயிரம் மக்கள் விரும்பியுள்ளனர். இந்த பதிவை நாம் பதிவு செய்யும் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவினை சுமார் 81K மக்கள் லைக் செய்துள்ளனர். மற்றும் 27K மக்கள் மருபதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு தற்போது ட்விட்டரில் 53.3 மில்லியன் பின்தொடர்பாளர்களும், பேஸ்புக்கில் 44,722,143 பின்தொடர்பாளர்களும் உள்ளனர். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரதமர் முறையே 35.2 மில்லியன் மற்றும் 4.5 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் பதிவு அவரது பின்தொடர்பாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.