இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நாளை மோதுகின்றன.
முன்னதாக நேற்று நடைப்பெற்ற 6 வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. வெற்றிப்பெறும் அணி மட்டுமே இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் என்ற இக்கட்டாண நிலையில் களம் இரங்கிய இரண்டு அணிகளும் கடுமையான போட்டியினை வெளிப்படுத்தின. இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.
முன்னதாக நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரில், இலங்கை பந்து வீச்சாளர் நோ பால் வீசியதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கும் வங்காளதேச வீரர்களுக்கும் இடையோ மோதல் ஏற்பட்டது. மேலும் ஆட்டத்தின் இடையில் தண்ணீர் கொடுக்க வந்த வங்கதேச வீரர் இலங்கை கேப்டனிடம் தவறாக பேசியதாகவும் சர்சைகள் கிளம்பியது.
பின்னர், வங்காளதேச அணியின் தலைவர் ஷகிப் அல் ஹாசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோர் நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
NEWS: Shakib Al Hasan and Nurul Hasan have each been fined 25 per cent of their match fees and given one demerit point following Bangladesh's victory over Sri Lanka.
READ ➡️ https://t.co/PST0TcNbM3 pic.twitter.com/9qaYil7oqo
— ICC (@ICC) March 17, 2018
இந்நிலையில், ICC நடத்தை விதிமுறைகளை மீறியதாக வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசன் மற்றும் நூருல் ஹாசன் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது!