Existance of Aliens: வேற்றுகிரகவாசிகள் இருப்பை உறுதி செய்கிறதா ஜேம்ஸ் வெப்

James Webb Space Telescope: ஒரு கிரகத்தில் நீரின் இருப்பு மட்டும் உயிரினங்களின் இருப்பை சாத்தியமாக்குமா? என்ற கேள்விகளை மீண்டும் எழுப்புகிறது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் அண்மைக் கண்டுபிடிப்பு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2022, 10:01 AM IST
  • நீரின் இருப்பு மட்டும் உயிரினங்களின் இருப்பை சாத்தியமாக்குமா
  • கேள்வி எழுப்பும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் அண்மைக் கண்டுபிடிப்பு
  • வேறொரு கிரகத்தில் தண்ணீர், மேகம், வாயு மண்டலம் உள்ளிட்டவை இருக்கலாம்
Existance of Aliens: வேற்றுகிரகவாசிகள் இருப்பை உறுதி செய்கிறதா ஜேம்ஸ் வெப் title=

Existance of Aliens: ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மிகவும் முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தொடங்கிவிட்டது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்டபுகைப் படங்களை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது நாசா. 

மனிதகுலத்தால் கட்டமைக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், மனித கண்கள் அல்லது லென்ஸ்கள், இதுவரை சாத்தியப்படாத பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் பணிகளை துவங்கிவிட்டது. 

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், பூமியில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்துள்ளது. வாயுக்கள் நிறைந்த மிகப்பெரிய கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

WASP-96 b என்பது பால்வீதியில் உறுதிப்படுத்தப்பட்ட 5,000 க்கும் மேற்பட்ட வெளிக்கோள்களில் ஒன்றாகும். இது பூமியில் இருந்து சுமார்  1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் தெற்குப் பகுதியில் விண்மீன் பீனிக்ஸ் இல் அமைந்துள்ளது, இது நமது சூரிய குடும்பத்தில் நேரடியான ஒப்புமை இல்லாத ஒரு வகை வாயு கிரகமாகும். 

மேலும் படிக்க | 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்திய நாசா

இந்தக் கிரகத்தில் தண்ணீர், மேகம், வாயு மண்டலம் உள்ளிட்டவை இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. வியாழன் கிரகத்தை விட பாதிக்கு குறைவான நிறை கொண்ட இந்த கிரகத்தின் விட்டம், வியாழனைவிட 1.2 மடங்கு அதிகம் ஆகும்.

 WASP-96 b என்பது நமது சூரியனைச் சுற்றி வரும் எந்தக் கோளையும் விட மிகவும் கொந்தளிப்பானது. மேலும் 1000°F க்கும் அதிகமான வெப்பநிலையைக் கொண்டது என்பதால், இங்கு வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும்.

சூரியனைப் போன்ற நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ள WASP-96 b, நமது சூரியனுக்கும் புதனுக்கும் இடையிலான தூரத்தில் ஒன்பதில் ஒரு பங்கு அருகில், தனது சூரியனுக்கு நெருக்கமாக இருக்கிறது. சொல்லப்போனால், நமது பூமி நாட்களுடன் ஒப்பிட்டால், அது தனது சூரியனை சுற்றுவதற்கு 3½ நாட்கள் ஆகும் என்று நாசா கூறுகிறது.

பிரபஞ்சத்தின் வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதை அறியும் ஆராய்ச்சிகளில், முதலில் நீர் இருப்பு தான் பிரதான தேடுதலாக இருக்கிறது. நாம் வாழும் பூமி கிரகத்திலும் தண்ணீர் இருப்பதால் தான் உயிரினங்கள் இருக்கிறது.  

பூமியின் தோற்றம் குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவதைப் போலவே, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற மற்ற கோள்களைக் கண்டறியும் ஆய்வும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | இதுவரை யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் பிரமாண்டமான காட்சி!

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் என்றால், அது ஏலியன்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற எந்தவித அவசியமும் இல்லை. உயிரினங்கள் என்பது ஒரு புழுவாகவோ, கிருமியாகவோ கூட இருக்கலாம். 

வேறு கிரகங்களில் ஒரு நுண்ணிய உயிரைக் கண்டறிவது பூமிக்கு அப்பால் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியின் மிக முக்கியமான படியாகும். மேலும் தண்ணீர் இருக்கும் இடத்தில், நுண்ணிய வாழ்க்கை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படியானால், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி கொடுத்திருக்கும் நீர் இருப்புத் தகவல், வேற்றுகிரகவாசிகள் இருப்பதை உறுதிப்படுத்தி விட்டதா?

வேற்றுகிரகவாசிகள், ஏலியன்கள் என்ற உலகத்தின் ஆர்வத்திற்கு தீனி போடுவதாக ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியின் நீர் இருப்பு கண்டுபிடிப்பு இருந்தாலும், இந்த டெலஸ்கோப், வானத்தை இன்னும் கொஞ்சம் ஸ்கேன் செய்து உறுதிபடுத்தும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  

மேலும் படிக்க | James Webb: பிரபஞ்சத்தின் பிரமாண்டமான காட்சியின் அசர வைக்கும் புகைப்படங்கள்

விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகியுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிஉலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொலைநோக்கியாகும். 

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம் எடுக்கப்பட்ட படங்களை நாசா வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து விண்வெளி நட்சத்திரங்களை மிக துல்லியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. 

சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகள் கடின உழைப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெ விண்வெளி தொலைநோக்கி பிரபஞ்சத்தின் மர்மங்களின் ரகசிய முடிச்சுகளை அவிழ்க்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | மாலத்தீவிற்கு தப்பி சென்று விட்டாரா ராஜபக்சே... வெளியான பரபரப்பு தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News