டெல்லி: இந்தியா-சீனா இடையிலான பிரச்சனைகள் பற்றி ஏப்ரல் 27, 28 தேதி-ல் சீனாவில் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி 27-ம் தேதி சீனா செல்கிறார்!
இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13-ம் தேதி சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளை அவர் சந்தித்து எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் வரும் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறுகிறது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று ஷங்காய் நகருக்கு புறப்பட்டு சென்றார்.
சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை இன்று சந்தித்த சுஷ்மா, தோக்லாம் எல்லை பிரச்சனை உள்பட இந்தியா - சீனா இடையிலான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினார்.
EAM @SushmaSwaraj concluding her Press Statement wishing Foreign Minister of China Wang Yi all success for SCO Foreign Ministers Meeting on 24th April. pic.twitter.com/F1Noz4YFjv
— Raveesh Kumar (@MEAIndia) April 22, 2018
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுஷ்மாவுடன் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, இருநாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட தலைவர்கள் மத்திய சீனாவில் உள்ள வுஹான் நகரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து வரும் 27, 28 தேதிகளில் நடைபெறும் இந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க வரும் இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் க்சி ஜின்பிங்-கை சந்தித்து சர்வதேச பிரச்சனைகள் மற்றும் இந்தியா-சீனா இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
Prime Minister #NarendraModi will hold a meeting with Chinese President #XiJinping on April 27-28 in Wuhan city, ahead of Shanghai Cooperation Organisation (SCO) summit in June.
Read @ANI story | https://t.co/KfUMp2AzLz pic.twitter.com/wc108ZI22j
— ANI Digital (@ani_digital) April 22, 2018