Cholesterol Control Tips: இன்றைய அவசர காலகட்டத்தில் பல வித நோய்கள் மக்களை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றில் நீரிழிவு நோய், உயர் கோலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் ஆகியவை கடந்த சில தசாப்தங்களில் மிக வேகமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, உலகம் முழுவதும் கொலஸ்ட்ரால் மற்றும் இதயப் பிரச்சனைகள் ஒரு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இவை நமது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சினைகள். நமது அன்றாட வழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால், இந்த நோய்கள் விரைவாக நம்மை ஆட்கொள்ளத் தொடங்கும். எனினும், உங்கள் உணவு முறையையும், சில தினசரி வழக்கங்களையும் மாற்றினால், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் மற்றும் இதய பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருக்க, மூன்று முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். கோலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதய பாதுகாப்பை வலுப்படுத்தும் அந்த மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
சரியான வாழ்க்கை முறை பழக்கங்களைப் பின்பற்றாதது கொழுப்பு தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் இதய நோய் முதலிடத்தில் வருகிறது. எடை அதிகரிப்பு, குறைவான உடல் செயல்பாடுகள் மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 3 மாற்றங்களும் மிக முக்கியமானவை
போதுமான அளவு தூக்கம்:
கொலஸ்ட்ரால் என்பது உடலின் தமனிகளில் சேரும் ஒரு வகை அழுக்கு கொழுப்பாக கருதப்படுகின்றது. போதுமான தூக்கம் இல்லாதது இந்த நோய்க்கு மிகப்பெரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் இல்லாமல் போனால், அது இதயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இரத்த அழுத்தத்தின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகின்றது. போதுமான தூக்கம் வர, இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இருதய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
போதுமான சூரிய ஒளி:
சூரிய ஒளிக்கு நம் உடலை வெளிப்படுத்தாமல் இருப்பது உடலில் வைட்டமின் டி குறைபாட்டை ஏற்படுத்துகிறது. குறைந்த வைட்டமின் டி அளவுகள் இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வைட்டமின் குறைபாடு உடலில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதய நோயாளிகள் காலையில் வெயிலில் சிறிது நேரம் செலவிடுவது முக்கியம். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
நாள்பட்ட மன அழுத்தம்:
அதிகப்படியான மன அழுத்தம் இதயம் மற்றும் கொழுப்பு நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் மக்களின் தொழில் வாழ்க்கை பரபரப்பாகவும் மன அழுத்தத்தை அளிக்கும் வகையிலும் மாறிவிட்டதால் மன அழுத்தம் ஏற்படுவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. மன அழுத்தத்தை நிர்வகிக்க, மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்த்து, உடல் செயல்பாடுகள் மற்றும் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.
இந்த பழக்கங்கள் கெட்ட கொழுப்பை அதிகரித்து இதயத்தை பலவீனமாக்கலாம்
- நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது
- துரித உணவுகள், சர்கரை பானங்களை அதிகமாக உட்கொள்வது.
- இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பது
- நள்ளிரவு நேரத்தில் சாப்பிடுவது
- காலையில் தாமதமாக எழுந்திருப்பது
- உடல் செயல்பாடற்ற நிலை
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Kidney Stones: சிறுநீரக கற்களை உருவாக்கும் சில உணவுகள்... எச்சரிக்கையாக இருங்கள்
மேலும் படிக்க | அடிவயிறு தொப்பையை பட்டுனு குறைக்க... காலையில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ