வேகமா எடை குறையணுமா? இந்த பருப்புகளில் இருக்கு வழி, சாப்பிட்டு பாருங்க

Pulses for Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மிக முக்கியம் என்றாலும், அதை விட, ஆரோக்கியமான உணவு உடல் எடையை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். எடை இழப்புக்கான அத்தகைய ஒரு உணவுப் பொருள் பருப்பு வகைகள் ஆகும். இதில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளன.

1 /6

பல வகையான பருப்பு வகைகள் உள்ளன. பருப்பு இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் உட்கொள்ளப்படும் ஒரு உணவு வகையாகும். இதை எளிதாக சமைத்துவிடலாம். மேலும், இது ஆரோக்கியமானது மற்றும் சுவையானது. உடல் எடையைக் குறைக்க நமது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில பருப்பு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /6

எடையைக் குறைக்க உதவும் அனைத்து கூறுகளும் பச்சைப்பயறில் காணப்படுகின்றன. பச்சைப்பறில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகையால், எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுகின்றது. பருப்பில் புரதம் அதிகமாகவும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. எனவே இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க இது உதவுகிறது.

3 /6

மசூர் பருப்பில் பல்வேறு சத்துக்கள் காணப்படுவதால் இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த பருப்பு உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையில் 32 சதவீதத்தை வழங்குகிறது. இந்த பருப்பு எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.   

4 /6

கொண்டைக்கடலை காபுலி சானா என்றும் அழைக்கப்படுகிறது. இது புரதம், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் வலுவான செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் இவை எலும்புகளை வலுப்படுத்துகின்றன. கூடுதலாக எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. 

5 /6

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ராஜ்மா, எடை இழப்புக்கு சிறந்த உணவாகும். சிறந்த விஷயம் என்னவென்றால், அதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவியாக இருக்கும்.

6 /6

அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் குறைந்தது 30 கிராம் பருப்புகளையும், சைவ உணவு உண்பவர்கள் தினமும் குறைந்தது 60 கிராம் பருப்புகளையும் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் உணவுடன் எந்த பருப்பை சாப்பிடாலும், அவை அனைத்தும் உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பருப்பு வகைகளாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.