சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் அதிகரிக்கும், கவனம் தேவை

Shani Vakri Effect 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் கிரக நிலைகளின் தாக்கத்தை தெளிவாகக் காண முடியும். இவற்றால் ஒருவரது வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. 

 

அனைத்து கிரகங்களிலும் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடங்கள் இருப்பார். சனி நீதியின் கடவுளாக அறியப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சனி அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார்.

1 /7

இப்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். ஜூன் 17-ம் தேதி இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியில் அவர் வக்ரமாவார். நவம்பர் 4-ம் தேதி காலை 8.26 மணிக்கு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். சனியின் வக்ர நிலையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

2 /7

ஜோதிட சாஸ்திரப்படி, சனியின் வக்ர சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வரும். இந்த நேரத்தில், உங்கள் வேலையில் குறுக்கீடு ஏற்படலாம். பண இழப்பு ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. கணவன்-மனைவி இடையே பதட்டமான சூழல் நிலவும்.   

3 /7

ஜோதிடத்தின்படி, சனியின் வக்ர இயக்கம் ரிஷப ராசியினருக்கு எதிர்மறையான விளைவுகளைத் தரப்போகிறது. பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரியும் இடத்தில் பதட்டமான சூழல் இருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.

4 /7

இந்த ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்தில் உள்ளனர். இதன் காரணமாக சனியின் வக்ர நிலை இவர்களுக்கு அசுபமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாக்குவாதத்தை தவிர்க்கவும். இதுமட்டுமின்றி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

5 /7

இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலை பல சிரமங்களைத் தரும். பணியிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது சிறப்பு. வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

6 /7

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனியின் வக்ர நிலை கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளைத் தரும். இந்த காலகட்டத்தில் உடல் மற்றும் மன வலியை சந்திக்க நேரிடலாம். அதுமட்டுமல்லாமல், உங்கள் தொழிலைப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

7 /7

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை