குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய பொட்டுக்கடலை ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த அற்புத உணவு. மிக குறைந்த கலோரிகளே உள்ள பொட்டுக்கடலையில் புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, B3 அகியவை நிறைந்துள்ளன.
காலை அல்லது மாலை சிற்றுண்டிக்கு பொட்டுக்கடலையை எடுத்துக் கொள்ளலாம். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கு ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை போதும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ஒரு நாளைக்கு 50 முதல் 60 கிராம் பொட்டுக்கடலையை உட்கொள்ளலாம்.
பொட்டுக்கடலை ஆரோக்கிய நன்மைகள்: உடல் பருமன் கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொட்டுக்கடலை தரும் நன்மைகள் ஏராளம். குறைந்த கலோரியும் நிறைந்த புரோட்டீனும் கொண்ட உணவாக உள்ளதால், ஒரு கைப்பிடி சாப்பிட்டாலே, வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும்.
ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும் பொட்டுக்கடலையை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். எனினும், சில பொருட்களுடன் பொட்டுக்கடலையை சாப்பிடுவது ரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். பொட்டுக்கடலையை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும், ஆனால் அதே பொட்டுக்கடலையை சில உணவுகளுடன் சாப்பிட்டால் பின்விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.
தயிர்: பொட்டுக்கடலை தயிர் கலவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பொட்டுக்கடலை மற்றும் தயிர் சேர்த்து வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும். பொட்டுக்கடலை இயற்கையில் உடலுக்கு சூட்டைக் கொடுக்கக் கூடியது. தயிர் குளிர்ச்சியை கொடுக்கும். எனவே இரண்டு பொருட்களும் இணைவது, உடலில் வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீன் உணவுகள்: பொட்டுக்கடலையுடன் மீனைச் சேர்த்து சாப்பிட்டால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் மீனில் புரதம் அதிகம் உள்ளத. பொட்டுக்கடலையும் புரதத்தின் நல்ல மூலமாகும். இரண்டும் இணைவதால், உடலில் சேரும் அளவிற்கு அதிஅக்மான புரதம், செரிமான அமைப்பை பாதிக்கலாம்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களுடன் அதிக புரதம் உள்ள பொட்டுகடலையை சாப்பிடக்கூடாது. சிட்ரிக் பழங்களில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிக புரதத்துடன் வினைபுரியும். இதனால் வயிற்றில் வாயு, அமிலத்தன்மை, வயிற்றில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதய ஆரோக்கியம்: பொட்டுக்கடலையை சரியான விதத்தில் சாப்பிட்டல் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இது கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள பாஸ்பரஸ் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கலாம்.
எலும்பு ஆரோக்கியம்: கால்சியம் நிறைந்த பொட்டுக்கடலை எலும்புகளை வலுப்படுத்தி, மூட்டு வலிகளை போக்க உதவுகிறது. 40 வயதிற்கு பிறகு கால்சியம் குறைபாடு ஏற்படுவது இயல்பு. அதிலும், பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதால், பொட்டுக்கடலையை தவறாமல் சேர்த்துக் கொள்வது பலன் தரும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.